அன்னை அருளிய மருத்துவ குறிப்புகள் – 1

1
1438

ஆட்டுப்பாலின் அருமை
காட்டில் வாழும் மானின் பாலுக்குக் காலத்தை வெல்லும் தன்மை உண்டு. மான் காட்டிலுள்ள இலைகளையும், மூலிகைகளையும் உண்பதால் மான்
பாலுக்கு சக்தி உண்டு. அந்தக் காலத்தில் காட்டில் தவம் செய்பவர்கள் மான் பாலை ஒருவேளை அருந்தி ஓரு வருடம் ஓட்டுவார்கள்.

இப்போதுள்ள மாட்டுப் பாலுக்கு அந்தத் தன்மைகளெல்லாம் கிடையாது. நீர் சேர்த்தல், கொழுப்பு, வாய்வு போன்ற தொல்லைகள் எல்லாம் மாட்டுப் பாலால் உண்டு.

மான் பால் கிடைப்பது அரிது. அதனால் தான் நோயோடு என்னிடம் வருகிற சிலரிடம் ஆட்டுப் பால் அருந்தச் சொல்கிறேன்.

நீராகாரம்
புளித்த நீரில் அரை உப்புப் போட்டுக் குடித்து வருவது நல்லது.  பழைய உணவு முறையே நல்லது. காபி, டீ உடலுக்கு நல்லது அல்ல.

பழைய கஞ்சி, பழைய சோறு சாப்பிட்ட காலத்தில் இவ்வளவு ஆஸ்துமா நோயாளிகள் கிடையாது.

புதியரக அரிசி அதன் செயற்கை புத்தியைக் காட்டும்.

 உணவு முறை
கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடுதான் வரும்.

பழங்காலம் போல களி, சோளம் முதலியவற்றைச் சாப்பிடுவது நல்லது.

பற்கள் உறுதி பெற

பற்பசைகள் உறுதி தராது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.

உமியைக் கருக்க வைத்து, வேப்பிலையைக் காய வைத்துத் துாளாக்கி இவற்றுடன் உப்பு சோ்த்துப் பல் துலக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேப்பிலை

தினம் வேப்பிலையைச் சோ்த்து உண்ண வேண்டும்

 பெருங்காயம்

உணவில் பெருங்காயத்தையும் சோ்த்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த சாறு

எலுமிச்சைச் சாறு, துளசி, பூண்டு, வெந்நீரில் கலக்கிச் சாற்றைக் குடிக்க வேண்டும்.

கோவைக்காய்

உணவில் கோவைக்காய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நரம்பு தளா்ச்சி உள்ளவா்களுக்கு

ஆட்டுப் பாலைக் காய்ச்சி, ஆடை நீக்கி அதனுடன் அவல், பனங்கற்கண்டு சோ்த்துக் குடித்து வர வேண்டும்.

ஜீரண சக்திக்கு

ஜீரண சக்திக்கு இஞ்சி, கொத்துமல்லி,
புதினாச்சாறு பிழிந்து குடித்து வரவும்.

பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகள், பாகற்காய், சுண்டைக்காய், புடலங்காய், பீட்ருட், வெங்காயம், மிளகு, ஏலக்காய் சோ்த்துச் சாப்பிட வேண்டும்.

அவ்வப்போது

பாகற்காய், சுண்டக்காய்களை அடிக்கடி உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். கசப்புச் சுவை புற்று நோயைக் கூடக் குணப்படுத்தும்.

பெண்களுக்கு

கேழ்வரகுக் களி, சோளக்களி, வரகரிசிக்களி ஆகியவற்றை உண்டு வந்தால் வீட்டு விலக்கு சமயங்களிலும் ரத்த ஓட்டத்திற்கும் நல்லது. கருச்சிதைவு ஏற்படாது.

கிழங்குவகை

பூமியில் உள்ள கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.

சீதள உடம்பு கொண்டவா்களுக்கு

விளாம்பழ இலை, நெல்லி இலை, நொச்சி இலை ஆகியவை சீதள உடம்பிற்கு நல்லது.

மூட்டு வலி நீங்க

வேப்பமர வோ், எலுமிச்சை வோ், அரசமர வோ், துளசி வோ், கண்டக்கத்தரி வோ், ஆகியவற்றைச் சோ்த்துக் கஷாயம் வைத்து இரண்டு சொட்டு  தினம் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு நல்லது.

தோல் வியாதிகள் வராமல் தடுக்க

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

சிகைக்காயுடன் பச்சைப் பயறு, கஸ்துாரி மஞ்சள், ஆலம்பட்டை, அரசம்பட்டை, எலுமிச்சம்பழத்தோல், கேழ்வரகு, மல்லி ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொண்டு தேய்த்துக் குளித்து வர வேண்டும்.

முக்கியத்துவம் உள்ள பொருள்கள்

விளாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், துளசி, வேப்பம்பழச் சாறு முதலியவற்றிற்கு மருத்துவத்தில் முக்கியத்துவம் உண்டு.

குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து

வேக வைத்த புழுங்கல் அரிசிச் சோறு அல்லது பச்சரிசிச் சோற்றுடன் வெண்ணெய், பருப்பு கலந்து கொடுப்பது உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக அமையும்.

குழந்தைகள்
வயிற்றில்

 குழந்தைகள் வயிற்றில் தலைமுடி சென்று விட்டால் வெண்ணெய் சாப்பிடக் கொடுக்க வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தலைமுடி வெளியேறும்.

மாதம் ஒருமுறை

 இஞ்சி, துளசி, எலுமிச்சைச் சாறு தயாரித்துத் தேன் கலந்து மாதம் ஒரு முறை குடித்து வருவது நல்லது.

களி செய்து உண்ணுக

பச்சரிசி, கோதுமை,  கேழ்வரகு – இவற்றைக் களி செய்து சாப்பிடுவது நல்லது.

குளிர்சாதனப் பெட்டி தீமை

குளிர்சாதனப் பெட்டியில் எதையும் வைத்துச் சாப்பிடக் கூடாது.

குடிப்பதற்கு உரிய சாறு

வெள்ளைப் பூண்டின் சாறு, முள்ளங்கிச் சாறு, எலுமிச்சம் பழச் சாறு மூன்றையும் வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.

தவிர்க்க வேண்டியவை

தக்காளி, உப்பு, எண்ணெய் இவற்றை அதிகம் தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலி நீங்க

கன்னிக் கோழி முட்டையை உடைத்து மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வேப்பெண்ணெய் கலந்து கழுத்தில் தேய்த்து ஊற வைக்க வேண்டும்.

 அதன் பிறகு பாசிப் பருப்புப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேய்த்துக் குளித்து வரவேண்டும்.

சளித் தொல்லை நீங்க

துளசிச் சாறு, இஞ்சிச் சாறு, மஞ்சள் துாள் போட்டுக் குடித்து வரவேண்டும்.

எதிர்கால நோய்கள்

இதயம், நுரையீரல், கண், காது தொடர்பான நோய்கள் அதிகமாகும்.

இயற்கைச் சூழ்நிலையை மாசுபடுத்தி வந்ததால் ஏற்படும் விளைவுகள் இவை!

இதயநோய்? காரணம்!

இன்று நீங்கள் உண்கிற உணவிலும். காய்கறிகளிலும், எண்ணெயிலும் கலப்படமே மிகுந்து கிடக்கிறது. அதனால் பலருக்கு இதய நோய் ஏற்படுகிறது.

தேவையற்ற அலைச்சல், ஓய்வின்மை காரணமாகவும் இதய நோய் வருகிறது.

  (நன்றி – மேல் மருவத்துார் அன்னையின் அருள் வாக்கு)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.