அம்மாவின் நிழல்

0
384

” அம்மாவிடம் எனக்கு நிழல் கிடைத்து விட்டது…..
எனக்குக் கிடைத்த நிழல் உங்களுக்கும் கிடைக்க வேண்டும்…. 
இனி நான் அம்மாவின் கோவிலைச் சுற்றி வந்து கும்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை….. ஆனாலும் நான் ஏன் கோயிலைச் சுற்றுகிரேன்? உங்கட்காக….!
நீங்கலெல்லாம் அம்மாவின் கோயிலை எப்படி வலம் வர வேண்டும்? எப்படிக் கும்பிட வேண்டும் என்பதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவதர்காக! என்னைத் தரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்கிரவர்கல் திருப்திக்காக…..!
நான் வலம் வரும்போது தரிசித்துக் கொண்டாலே போதும்! ஆனாலும் என்னிடம் நேரில் வந்து பேச வேண்டும்…., குரையைத் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறார்கள்….., அதற்கு அவசியம் இல்லை! அவர்கள் தரிசனத்துக்காகத்தான் நான் கோயிலையே சுற்றுகிரேன் கற்பூரத்தட்டு ஏந்துகிரேன்……,
என்னைத் தரிசித்து விட்டு, அப்படியே அம்மா எதிரில் தங்கள் குறையைத் தெரிவித்து விட்டுச் சென்றாலே போதுமானது…… “