அம்மாவிம் கற்றதும் பெற்றதும்…

0
299

*இன்றைய தொழில்நுடபம் வாய்ந்த கேமராக்களை எல்லாம் விட மிக மிகச் சக்தி வாய்ந்த ஒரு மனக்கேமரா நம் ஆன்மிக குரு அம்மா அவர்களிடம் உள்ளது. அது எப்போதுமே உறங்குவதில்லை. நம்மையெல்லாம் கண்காணித்துக் கொண்டே உள்ளது என்பது நான் அனுபவத்தால் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம்.*

*அந்தக் கேமரா நம் உருவத்தை மட்டுமல்ல, உதடுகளில் இருந்து வெளிவரும்* *வார்த்தைகளை மட்டுமல்ல நம் உள்ளங்களை ஊடுருவி உண்மைகளையும், உணர்வுகளையும், நம் கள்ளத்தையும், கலக்கங்களையும்,….*
*இவ்வளவு ஏன்….நமக்கே முழுவதும் தெரியாத நம் ஆழ்மனச் சிந்தனை மற்றும் எண்ணங்களையும் கூடக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது.*

இதை இன்னமும் சிலர் உணர்ந்தும் உணராமல், அறிந்தும் அறியாமல், தெரிந்தும் தெரியாமல், அம்மாவிடம் சில விஷயங்களைச் சொல்லும்போதும், சிலவற்றைச் சொல்லாமல் மறைக்கும்போதும், எனக்கு மனதிற்குள் சிரிப்புதான் வரும்.வருத்தம்தான் வரும்.
*யாராவது போய்ச் சொல்லித்தானா நடப்பவை எல்லாம் அம்மாவுக்குத் தெரியப் போகிறதா என்ன…!?*

*அனுபவங்கள் கொடுத்து நமக்குப் பாடம் நடத்தும் ஆன்மிக குருவாக அல்லவா அம்மா இப்போது அவதாரம் எடுத்துள்ளார்கள்* என்பது நான் அறிந்து கொண்ட பாடம்.அந்த அனுபவ வகுப்பில் எல்லோருமே படித்துக் கொண்டுள்ளோம் என்று நானே என்னைத் தேற்றிக் கொள்வேன்.

*அன்னையின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவற்றில் தன்னை மறைத்துக் கொண்டு நம்மை மாயையில் வைத்து வாழும் அவதாரம் அல்லவா இது!*என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன்.

இன்னும் சிலர் ஆன்மிக குருவிடம் பேசுவார்கள். அருள்வாக்குகள் கேட்பார்கள். தாங்கள் விரும்புகிற, தங்களுக்கு சாதகமாகத் தெரிகிற விபரங்களை மட்டுமே வெளியே கூறுவார்கள்.இவற்றை அறியும் வாய்ப்புகளும் எனக்கு நிறையக் கிடைத்தன.

ஆனால் காலப்போக்கில், அம்மாவின் அருளால், அவர்களில் பலர் மனம் மாறி இன்று அம்மாவின் சிறப்புத் தொண்டர்களாக வலம் வருவதக மகிழ்வுடன் பார்க்கிறேன்.

நாம் பக்தனாக வந்தோம். அம்மாவின் அருளால் தொண்டனாகும் வாய்ப்புக் கிடைத்தது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொண்டர்களாக வாழ்ந்து வரும் பலரையும் காண்கிறேன்.
அத்தகைய தொண்டர்கள் மேல் அம்மா பொழியும் பாசமழையை, சிலரை உற்று கவனித்து, நான் உணர்ந்து வருகிறேன்.

அவர்கள் கேட்காதலேயே கூட எது எது எப்பெப்போ, யார்யார்க்கு கொடுக்க வேண்டுமோ அதை அதை அப்பப்போ அவர்களுக்கு அம்மா அந்தத் தொண்டர்கள் கூட அறியாத அளவிற்கு கொடுத்து வருவதை சக்திஒளி ஆசிரியன் என்ற பணியின் மூலமாக எனக்கு அம்மா உணர்த்தி
இருக்கிறார்கள்.

*அதற்குத் தேவை முழுச் சரணாகதி. அம்மாமேல் அசைவற்ற, அளவற்ற நம்பிக்கை வைத்து, நம்பிக்கை வைத்தால் நம்மைக் கைவிடாத தெய்வம் நம் ஆன்மிக குரு*என்பதைப் பலரின் வாழ்க்கை அனுபவக் கடிதங்கள் மூலம் எனக்குப் புரிய,தெரிய, அறிய வைத்துள்ளார்கள் நம் அம்மா.

ஏன் எனக்கே சில நேரடி அனுபவங்களையும் அம்மா காலப்போக்கில் கொடுத்துள்ளார்கள்.