அம்மா அருளிய மருந்து

1
2307

(உங்கள் கடிதம் பகுதியில் இருந்து)

எங்கள் குடும்பம் கடந்த 13 வருடங்களாக அம்மாவின் அருளாசி பெற்று வருகிறது. நமது அம்மா எங்களது வாழ்க்கையில் பல அற்புதங்களைச் செய்துள்ளாள். சுமார் 6 மாதத்திற்கு முன்பாக எனக்கு மாதவிடாய் தொந்தரவு இருந்து வந்தது. மருத்துவரிடம் சென்றும் முழுமையாகக் குணமாகவில்லை. இந்நிலையில் நான் அம்மாவிடம் வேண்டிக் கொண்டேன். நான் அம்மாவை நினைத்து வேண்டிய நொடிப் பொழுதில் “ சக்தியுகம் “ நிகழ்ச்சியில் தினம் ஒரு அருள்வாக்கு பகுதி மூலம் ஒரு வழிகாட்டினாள். எனது நோய்க்கு அந்த அருள்வாக்கில் அன்று பதில் கூற்ப்பட்டது.

அதாவது தினமும் கேழ்வரகு , கம்பு போன்ற தானியங்களைக் களியாக சமைத்து அதனை உண்டு வந்தால் கர்பப்பை சம்பந்தமான நோய்கள் தீரும் என்று கூறியது. நான் அம்மா கூறியவாறு அந்த உணவை உட்கொண்ட பின்பு, எனது பிரச்சனை முழுவதுமாக நீங்கியது. நமது குருவை முழுவதுமாகச் சரணடைந்தால் அவள் அருளைப் பூரணமாகப் பெறலாம். இதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.நமது பிரச்சனைகளை எங்கு இருந்தாலும் செவி சாய்ப்பாள் நம் அன்னை.

நன்றி சக்தி. செல்வி
– கோவை வடக்கு

சக்தி ஒளி பக்கம் – 46 ,ஏப்ரல் 2009.