அருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை

0
442

பொங்கல் விழா என்பது இயற்கையை வணங்கும் பழமையான விழா

தை மாதம் பொங்கல் திருநாளில் பூமியை சுத்தம் செய்து கோலமிட்டு, வாழை கன்று, தோரணங்களால் அலங்கரித்து மண்ணால் செய்யப்பட்ட மண் பானை வைத்துப் பாலை ஊற்றி ஆது காய்ந்து பொங்கி வழியும் போது அதில் புது அரிசியை இட்டுக் குடும்பத்தினர் .

இப்படிப் பொங்கல் பண்டிகை என்பது இயற்கையைப் போற்றும் ஒரு பண்டிகை. இதில் இயற்கையின் ஐந்து அம்சங்களான மண் அடுப்பு மற்றும் மண் பானை எனும் நிலம், பால் எனும் நீர், நெருப்பு எனும் தீ, அது எரியப் பயன்படும் காற்று இவை அனைத்தையும் இணைக்கும் ஆகாய வெட்டவெளி ஆகிய ஐந்தையும் பயன் படுத்துகிறோம்.

குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் என்ற அடிப்படையில் வாழைக் கன்றை வைத்து வணங்குகிறோம்.

எனவே தைப்பொங்கல் என்பது ஒரு இயற்கை வழிபாடு, தை மாதம் இரண்டாம் நாள் நிலத்தை உழுது உழவுத் தொழிலுக்கு உள்ள மாடுகளைத் தெய்வ நிலையில் வைத்து வணங்கும் மாட்டுப் பொங்கல் விழா.

அடுத்த நாள் சூற்றதையும், நட்பையும் கண்டு கலந்து பேசி அன்பு பாராட்டி மகிழ்ந்திடும் நாள் “காணும் பொங்கல்”

இத்தகைய பொங்கல் விழாவினால் மனம் பொங்கி மகிழ்ச்சி ஆகிறது. இந்த “இயற்கை விழா” நிலைக்க வேண்டும். என்றால் இயற்கையை வணங்கிப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் இன்று இந்த நிலை மாறி, இயற்கையாகிய மண்ணை மாசு படுத்தி விட்டோம். மண் பாத்ரிங்களுக்குப் பயன்படுத்துகிறோம் பூச்சி கொல்லிகளாலும், பதபடுத்தும் ரசாயனத்தாலும் உணவுப் பொருட்களை விஷமாக்கி விட்டோம். நெருப்பைக் கூட கேஸ் அடுப்பாக்கி விட்டோம். பொங்கல் பண்டிகைக்கு வெட்ட வெளியில் படைய லிட்ச் சூரியனை வணங்குவதைக் கூட மாற்றி வீட்டினுள் பூஜையறையில் படையலிட்டு வணங்குகிறோம்.

மனிதன் இயற்கைச் சார்ந்து அதனைப் போற்றி வாழ்ந்த காலத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கியது.

மனிதனின் உடல்நிலையும் மன நிலையும் நன்றாக இருந்தது. இந்நிலை மாறி விஞ்ஞான வளர்ச்சியால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. இயற்கைச் சீற்றம் ஏற்படுகின்றது. பல நோய்கள் வருகின்றன. இயல்பான வாழ்வு பாதுகாக்கப் படுகின்றது. நிலைமை நேற்று மோசமாக இருந்தது, இன்று மோசமாக இருந்தது, இன்று மோசமாக இருக்கிறது, நாளையும் மோசமாகத் தான் இருக்கும். எனவே தான் நாம் இயற்கையை வணங்கச் சொல்கிறோம். இயற்கையைச் சார்ந்து வாழ்ச் சொல்கிறோம். இயற்கையை வைத்து தான் எதையும் செய்ய முடியும்.

விஞ்ஞான வளர்ச்சி ஓரளவுக்குத் தேவை தான். அதன் அதிகமான வளர்ச்சியே அழிவுக்கு வித்திடும். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற சாதானங்களால் மனித மூளையின் சக்தி பாதிக்கப் படுகின்றது. செல்போனால் உடலில் உள்ள செல்கள் பதிகப் படுகின்றன. மனம் தடுமாறுகிறது ஞாபக மறதி ஏற்படுகின்றது.

மனிதனுக்கு உடல் இருக்கும் வரை உணர்வு இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த உணர்வுகளில் நன்மை தரும் உணர்வுகளை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் தீய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் அதில் ஆன்மீக உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது என்றும் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போழுது வாழும் வாழ்க்கை நிலையானதல்ல! அது எப்பொழுது முடியும் எனத் தெரியாது. போனால் போனது தான்! அப்படி முடிவதற்கு முன் ஆன்மிக உணர்வுகளை வளர்த்து நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். நல்ல எண்ணங்களையும் செயல்களையும் மற்றவர் மனதிலும் விதைக்க வேண்டும்.

தாய் தந்தையர் மேல் அன்பும், பாசமும் வைக்க வேண்டும். தாய் தந்தையரே வழிகாட்டும் தெய்வங்கள் என்றறிந்து அவர்களைப் போற்ற வேண்டும்.

ஆன்மிக வழியில் ஈடுபட்டுத் தான தர்மம் செய்து, ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, இயற்கையைப் போற்றி வணங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றென்றும் அமைதியும், நிம்மதியும் “பொங்கும்”.

வாசகர்களுக்கும், பக்தர்களுக்கும், அம்மாவின் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்.

ஓம் சக்தி!