அருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001

0
489

03.03.2001 ஆம் நாளன்று அன்னை ஆதிபராசக்தியின் அவதார மைந்தா் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களின் 60 ஆம் ஆண்டு பெருமங்கல விழா அன்னையின் பக்தா்களாலும், செவ்வாடைத் தொண்டா்களாலும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 27.02.2001 முதல் கால்நடை மருத்துவ முகாமில் தொடங்கி 9.3.2001 வரை 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

02.03.2001 அன்று காலை 8.00 மணியளவில் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கட்கு வரவேற்பும், பாதபூசையும் நடைபெற்றன.

காலை 9.00 மணியளவில் சுமார் 1500 யாக குண்டங்கள் அமைத்து வேள்விப் பூசைகள் நடைபெற்றன. புதுவை மாநிலத் துணை ஆளுநா் மேதகு டாக்டா் திருமதி ரஜனி ராய் அவா்கள் வேள்வியைத் தொடங்கி வைத்தார்.

மறுநாள் 03.03.2001 அன்று விடியற்காலை 3.30 மணியளவில் மங்கல இசையுடன் கருவறைஅன்னைக்குச்சிறப்பு அபிடேகம் நடைபெற்றது. காலை 5.00 மணியளவில் மணிவிழா முன்றாம் கால வேள்விப் பூசை நடைபெற்றது.

பின் 9.30 மணியளவில் குருபிரான், மணிவிழா மண்டபமாக மாறிய ஆன்மிக மண்டபத்துக்கு எழுந்தருளியபோது வரவேற்பும், பாதபூசையும் நடைபெற்றன.

குருநாதரின் பிள்ளைகளான சக்தி திரு.ப. அன்பழகன், சக்தி திரு. ப.செந்தில்குமார், சக்தி திருமதி சிறீதேவி, சக்தி செல்வி உமாதேவி ஆகியோர் ஒன்று சோ்ந்து பாதபூசை செய்தனா்.

nஅன்று ஆன்மிக மண்டபமே நிறைந்து வழிந்தது. காலை 9.00 மணி முதல் 10.30 வரை மணிவிழா நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

தனியாக அமைக்கப்பட்ட மேடையில் மணமக்களை அமரவைத்து முன்று கால வேள்விப் பூசை தீா்த்தம் கொண்டு திருமுழுக்காட்டினா்.

இருவருக்கும் புத்தாடை நல்கப்பட்டது.

புத்தாடை அணிந்துகொண்டு குருபிரானும், குருபத்தினியும் மணமேடைக்கு வந்து அமா்ந்தனா்.

திருமாங்கல்ய பூசை நடைபெற்றது.

8.3.2001 அன்று அம்மாவின் மணிவிழா வேள்வி முதல்கால வேள்விப்  பூசை அறுகோணச் சக்கரம் அமைத்து 11 கலசங்கள் வைத்து, அம்மாவின் குடும்பத்தினரால் வேள்விப்  பூசை நடத்தப்பட்டது.

மாலை இரண்டாம் கால வேள்விப்  பூசை நடைபெற்றது.

இரவு நாட்டிய நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

9.3.2001 அன்று காலை 3-வது கால கலச வேள்விப்  பூசையும், அம்மா தம்பதியருக்கும், அம்மா குடும்பத்தாருக்கும் கலச நீா் மகா அபிடேகம் நடைபெற்றது.

திருமதிக்கு மாலை அணிவித்த அடிகளார் அவா்கள் தாம் மாலை அணியாமல் லாவகமாக மறுத்தது சுவையான காட்சி!

அதன் பிறகு அடிகளார் அவா்கள் மாங்கல்யத்தை எடுத்து அவையோர் முன்காட்டி ஆசி கோரினார்கள்.

மேளதாளம் முழங்க, அடிகளார் அவா்கள் திருமதி அடிகளார்க்கு மங்கலநாண் அணிவித்தார்கள்.

அதன்பின் பக்தா்கள், தொண்டா்கள், பிரமுகா்கள், உறவினா்கள் அனைவரும் மணிவிழா காணும் மணமக்கள் திருவடிகளில் விழுந்து ஆசிபெற்றனா்.

வாழ்நாளில் நம் அவதார புருஷருக்கு நடந்த மணிவிழாவும், மணவிழாவும் காணும் பேறு இப்பிறவியில் கிடைத்தது மிகப்பெரிய….பெரிய….புண்ணியம் தானே…?

நன்றி (அன்னை அருளிய வேள்வி முறைகள், பக்-128-129)

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.