உடல் நலம் பாகம்-1

0
4425

“”சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்”. நல்ல உடல்நலம் இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவித்து நன்றாக வாழ முடியும். வரும் முன் காப்பதே நலம். நோய் வந்த பின்பு அவற்றுக்குச் சிகிச்சை செய்யும் பொழுது ஏற்படும் சிரமங்களும் செலவுகளும் மிக அதிகம். அதனால்தான்  “ அம்மா “ நோய் வராமல் தடுப்பதற்கு பல எளிய மருந்துகளை அருளியுள்ளாள்.அவற்றைத் தவறாமல் கடைபிடித்தால் நோயின்றி வாழ முடியும்.

நோய்கள் வராமல் தடுக்க :

    நோயின்றி வாழ “ அம்மா “ பல வழிமுறைகளைக் கூறியுள்ளாள். அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதுமானது.

 •     தினமும் மூன்று வேப்பிலையைத் தவறாமல் சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.
 •     எலுமிச்சம்பழச்சாறு, வேப்பிலை, மிளகு, சுக்கு அனைத்தையும் வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடித்து வர        வேண்டும்.
 •     கொத்தமல்லி, துளசி, வேப்பிலை, இஞ்சிச்சாறு இவற்றுடன் தேன் கலந்து குடிப்பது உடம்புக்கு நல்லது.
 •     வெள்ளைப் பூண்டின் சாறு, முள்ளங்கிச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் வெந்நீரில் கலந்து குடிப்பது நல்லது.
 •     நல்ல உடல் நலத்திற்குக் கொடி வேர்க்கடலை, அவல், தேன் மூன்றையும் கலந்து சாப்பிடலாம்.
 •     பச்சரிசி, கோதுமை, கேழ்வரகு இவற்றை களி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
 •    
  இஞ்சி, துளசி, எலுமிச்சம் பழம் இவற்றைச் சாறாகத் தயாரித்து அதில் தேன் கலந்து அதனுடன் வெந்நீர் சேர்த்து மாதம் ஒரு முறை குடித்து வரலாம்.
 •     எலுமிச்சம் பழச் சாற்றோடு, துளசியுடன் பூண்டை வெந்நீரில் கசக்கிய சாற்றோடு கலந்து குடித்து வர வேண்டும்.
 •     புளித்த நீரில், அரை உப்புப் போட்டு குடித்து வருவது நல்லது.
 •     வாரம் ஒரு முறை கேழ்வரகுக் கஞ்சி, சோளக்களி, பூண்டு, பனங்கற்கண்டு சாப்பிட்டு வருவது நல்லது.
 •     நோய்கள் வராமல் தடுக்க வேண்டுமானால் உப்பு, புளி, காரத்தைக் குறைக்க வேண்டும்.
 •     வாரத்திற்கு ஒரு நாள் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும்.

 

நன்றி,

அன்னை ஆதிபராசக்தி அருளிய மருந்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.