ஓடுகிற ஓட்டத்தில் செய்துவிட்டுப் போய்விடுவேன் பாகம் 2

0
376

1992 ஆம் ஆண்டில் ஜீன் மாதம் ஒருநாள் மாலை நேரம். சக்தி அவயாம்பாள் அவர்கள் இல்லத்தின் உள்ளே அமர்ந்து விருந்தினர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பகுதியில் அவர் கணவர்  சோபாவில் அமர்ந்து இருந்தார்.

வீட்டு வாசலில் நாகத்தின் குட்டி ஒன்று ஆனந்தமாகப் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. சிறு குழந்தையின் நடனத்தைப் பார்க்கும் ஆவலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் தம் துணைவியாரை அழைத்துத் தகவல் சொன்னார். அவரும் வந்து பார்த்து அதை அன்னையின் திருவுருவாகவே எண்ணி மகிழ்ந்தார். மற்றவர்க்கும் விளக்கினார்.

யார் கண்ணிலும் பட்டுவிட்டால் அந்தக் குட்டிக்குத் துன்பம் நேருமே என்று இந்தத் தாய் எண்ணினார்.

யார் கண்ணிலும் படாமல் போய்விடு தாயே ! என்று வேண்டிக் கொண்டார்.

பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண் பார்வையில் இருந்து நாகக்குட்டி நழுவியது. அது எங்கோ மறைந்து விட்டது.

பத்துப் பதினைந்து மணித் துளிகள் கழித்துப் பக்கத்து வீட்டிலிருந்து உடல் நலமில்லாத பையனின் தாயார் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

“ அம்மா ! பாருங்களேன் ! என் பிள்ளையை பாருங்களேன்….எங்க வீட்டுக்கு உள்ளே வந்து பாருங்களேன்… என்ன ஆச்சுன்னு தெரியலையே..”

சக்தி அவயாம்பாள் அவர்களும், மற்றவர்களும் பயந்து
போய்ப் பாம்பு அவர்கள் வீட்டுப் பையனுக்கு ஏதோ ஊறு செய்து விட்டதோ என்று அஞ்சி ஓடிப் பார்த்தார்கள். ஊர் கூடிவிட்டது.

 நன்றி ,

சக்தி ஒளி – விளக்கு 12; சுடர் 6; 1993.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.