ஓம் அடலுறும் ஆசைகள் பெருக்கி னை போற்றி ஓம் !

0
1176

539, ஓம் அடலுறும் ஆசைகள் பெருக்கி னை போற்றி ஓம் !

540. ஓம் அறிவளித் தாசைகள் மாய்ப் பாய் போற்றி ஓம் !

மனிதர்களின் துன்பங்கட்குக் காரணம் என்ன ?
இதற்கு விடை தேடி, 40 ஆண்டுகள் அலைந்தார் புத்தர்.கடும் தவம் மேற்கொண்டார்; கடைசியில் அவருக்கு ஞானம் உண்டாயிற்று.
ஆசைதான் துன்பங்கட்குக் காரணம் என்று புலப்பட்டது .
நம்மைச் சுற்றியுள்ள பொருள்களைப் பார்த்து, அவற்றை நாமும் அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. கார், பங்களா, வீடு, வாசல், தோட்டம் , துரவு, நவீன வசதிகள் எல்லாவற்றையும் வாங்கிச் சேர்த்து வைத்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வளர்கிறது.

ஆசைப்பட்ட ஒன்று கிடைத்ததும், மனம் திருப்தி அடைய வேண்டும்., ஆனால் அவ்வாறு திருப்தி அடைவதில்லை.

ஒரு ஆசை நிறைவேறினால், இன்னும் இன்னும் என்று மனம் அலைகிறது’
ஆசைக்கோர் அளவில்லை…..? அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும், கடல் முழுதும் நம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றே மனம் அலையும்.

ஆசைகள் நிரம்பிய மனம் சும்மா இருக்காது. அது கொந்தளித்தபடியே இருக்கும். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, மனம் போராடும். அதனால் தான் ” அடல் உறு ஆசை” என்று இந்த மந்திரம் சொல்கிறது.

“ஆரா இயற்கை அவா!” என்பார் திருவள்ளுவர். திருப்தி கொள்ளாத இயல்பு கொண்டது, ஆசை !

துன்பத்துக்குக் காரணமான நிகழ்ச்சிகளே, நம்மைச் சுற்றி நடக்கின்றன . தெளிந்த மனம் கொண்டவனுக்கு, அவற்றால் சஞ்சலம் ஏற்படுவதில்லை.

துன்பத்தில் துடிக்காத, இன்பத்தில் நாட்டமில்லாத, பற்று, அச்சம், சினம் அற்ற, உறுதியான உள்ளத்தை உடையவன்” முனிவன்” எனப்படுகிறான்.

பொருள்களை அடைய வேண்டும் என்று நினைப்பதால், பற்று உண்டாகிறது; அந்தப் பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது. அந்த ஆசைக்குத் தடை ஏற்படும் போது, சினமாக வடிவெடுக்கிறது.

சினத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது’ குழம்பியவனுக்கு நினைவாற்றல் குறைகிறது. நினைவு நாசம் அடையும் போது, புத்தி நாசம் அடைகிறது. புத்தி நாசம் அடைவதால், மனிதன் அழிவைத் தேடிக் கொள்கிறான்.

அரச மரத்தின் விதைகண்ணுக்குத் தென்படாது; அது நுட்பமானது .ஒரு கற் கட்டடத்தின் சிறிய இடுக்கில் வீழுகிறது. அது வேர் விட்டுச் செடியாகி, மரமாகிக் கட்டடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது. அது போலவே எண்ணம் நுண்ணியதாக இருந்தாலும், அது உள்ளத்தில் புகுந்து ஆளையே மாற்றி விடுகிறது. ஒரு வனை மேலோனா க்குவதும், கீழோனாக்குவதும் அவனது எண்ணங்களே !

ஆகையால் மனிதன் , தன் எண்ணங்களைப் பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் –

தூய தெய்வீக எண்ணங்களே, மனத்தில் எப்போதும் இடம் பெற வேண்டும் .

நல்ல மனிதர் களுக்குக் கூட ஆசை , பந்தம், பாசம், பற்று கள் வந்து குடி கொள்கின்றனவே,, அது ஏன் ?

“காற்றால் அசைவு ஏற்படுவது போல, உள்ளத்தில் பெருகும் ஆசைகளால், ஆன்மா அலைகிறது ” என்கிறாள் அன்னை. ஆன்மா அலைவதால், அமைதியை இழக்கிறது.

“உங்கள் மனத்தில் எப்போதும் ஆன்மிக அலைகளே எழுந்த படி இருக்க வேண்டும். வாழ்க்கை வசதி, பந்த பாசம், குழந்தைகள் என்கிற ஆசை அலைகள் தோன்றிய படி இருப்பதால், ஆன்ம அலைகள் ஏற்படுவதில்லை” என்கிறாள் அன்னை.

பந்தம், பாசம், உணவு, ஆசை உணர்வு, அடி – உதை, இன்பம் – துன்பம் ஆகியவையும் தேவை தான்; இல்லையேல் ஆன்ம வளர்ச்சி பெற முடியாது” என்றும் சொல்லிக் காட்டுகிறாள்.

பற்றாக்குறையினால் தான் ஆசைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாகவே, மக்களுக்கு வலிகள் ஏற்படுகின்றன. வயிற்று வலி, தலைவலி, புகழ் வலி என்ற பல வலிகளுக்கு ஆசையே காரணம்.

“ஆசைகள் குறையக் குறைய, ஆன்மா அமைதி பெறும்; எதையும் தாங்கும் சக்தி பெறும்; அப்போது கல் போலநிலைத்து நிற்க முடியும் ” என்கிறாள் அன்னை, மேலும், அன்னையின் அருள் வாக்குகள் சில, கீழ்வருமாறு:
?
 “ஆன்மா வளரவும், அறிவு வளரவும் வேண்டியே, பற்று என்ற ஒன்றும் வேண்டியிருக்கிறது.”
?
 “எரிகிற கொள் ளிக் கட்டையைத் தண்ணீரால் அணைத்த பிறகும், சற்று நேரத்திற்குச் சூடு இருந்தபடியே இருக்கும். நீங்கள் என்ன தான் ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஆசைகள் இருக்கும் வரை, துன்பமும் தொடர்ந்து இருக்கும் “
?
 “உள்ளே ஆன்மாவும், உள்ளத்தே உணர்வும் இருக்கிறவரை, ஆசைகள் ஒழிவதில்லை”
?
 உயிரும் ஆன்மாவும் சேர்ந்த உடல் என ஒன்று இருந்தால் தான், உலகத்தில் வாழ்க்கை என்ற விளையாட்டை விளையாட முடியும் “
?
 “உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆசைகளை, ஆன்மா அழிக்க வேண்டும் – ஆனால் இப்போதோ ஆசைகள், ஆன்மாவை அழிக்கின்றன.”
?
 “உங்கள் ஆசைக்கும் எல்லையில்லை; உங்கள் வாழ்விற்கும் எல்லையில்லை. எல்லை வருத்துக் கொண்டு வாழ்வதில்லை.”
?
 ” எதிலும் அளவோடு இருந்தால் நல்லது; எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிகமாக ஆசைப்படக் கூடாது – “
?
 “மழை அதிகமாகப் பெய்தால், அழிவு தான் ஏற்படும்; அளவுக்கு மீறினால் அழிவு தான் ஏற்படும்.”
?
 பொருளைப் படைத்தால் மட்டும் போதாது; காப்பாற்றவும் வேண்டும்”
?
 “உணவு, உடை, இருப்பிடம் என இவை இருந்தாலே போதும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.”
?
 ” உழைத்துப் பிழைப்பதற்கு, ஆன்மா வழி செய்து கொடுத்தால், அதுவே போதும் என்று இருக்க வேண்டும்.”

– மேலே கண்டவை அன்னையின் அருள்வாக்குகள் .