ஓம் உடலின் ல் ஐம்பொறி சேர்த்தாய் போற்றி ஓம் !

0
1323

534. ஓம் உடலின் ல் ஐம்பொறி சேர்த்தாய் போற்றி ஓம் !

535. ஓம் ஐம்பொறிக்குறு புலன் சேர்த்தாய் போற்றி ஓம் !

நமக்கு மனிதப் பிறவியைக் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி ,அறிவும் அனுபவமும் பெற வேண்டி, அறிவுக் கருவிகள் ஐந்தைக் கொடுத்திருக்கிறாள். அவற்றை ஞானேந்திரியங்கள் என்றும் குறிப்பிடுவர். அவை : 1. மெய், 2. வாய், 3. கண், 4. மூக்கு, 5. செவி –

1. மெய் : மெய் என்பது உடம்பு. இது குளிர், வெப்பம், பனி, வெயில், குளிர்க் காற்று, அனல் காற்று என்ற வேறுபாடுகளை உணர்கிறது.

2. வாய் : இது உப்பு, இது புளிப்பு, இது இனிப்பு, இது கசப்பு, இது துவர்ப்பு, இது காரம் (உரைப்பு) என ஆறு சுவைகளை உணரச் செய்கிறது.

3. கண் : நம்மைச் சுற்றியுள்ள உலக்கத்தில் நடப்பதைப் பார்ப்பதற்கும், புத்தகங்கள் படித்து அறிவைப் பெறுவதற்கும் உதவுகிறது.

4. மூக்கு: நம்மைச் சுற்றியுள்ள நறு மணங்களையும், நாற்றங்களையும் பிரித்து அறிய உதவுகிறது. உயிரும் உடம்பும் இயங்கக் காற்று அவசியம். அந்தக் காற்றைச் சுவாசிக்க உதவுவது மூக்கு .

5. செவி : நம்மைக் சுற்றி எழுப்பப்படும் ஓசை, ஒலிகளைக் கேட்கவும், அடுத்தவர் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு உள் வாங்கவும், கேள்வி ஞானத்தால் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் உதவுகிறது காது .

இப்படி சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன் அறிவைக் கொடுப்பது ஐம்பொறிகள் .

உலகப் பொருட்கள் தங்கள் கவர்ச்சியால், புற உலகை நோக்கிப் புலன்களை இழுக்கின்றன. புலன் இன்பங்களையே நமது மனம் அதிகமாக ஈர்க்கிறது.

“புலன்களை விட, உலகப் பொருள்களே வலிமை வாய்ந்தவை ” என்று கட உபநிடதம் கூறுகிறது’. ( 1 : 3: 10)

இந்தக் கருவிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை, பார்க்குமாறு தூண்டப்படும் போது, கண்கள் பார்க்கின்றன; கேட்குமாறு தூண்டப்படும் போது, காதுகள் கேட்கின்றன; இவ்வாறே ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது.

புலன்களைத் தூண்டுபவை உலகப் பொருட்கள் ; அவற்றின் கவர்ச்சியாலேயே, நாம் உலகை அனுபவிக்கிறோம். அதனால் தான் உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

புலன் இன்பங்களில் அதிக நாட்டம் கொண்டவனுக்கு, ஆன்மிகம், இறை அனுபவங்களால் ஏற்படும் சுவையை உணர முடிவதில்லை.

புலன்கள் தரும் இன்பங்கள், ஒருவனை ஆன்ம முன்னேற்றம் பெற முடியாமல் தடுத்து, கீழே தள்ளிவிடும்.

புலன் இன்பங்களை முற்றிலும் தவிர்க்கவும் முடியாது; அவற்றில் முற்றும் தோய்ந்து விடவும் கூடாது –

அது கருதியே, “புலன்களைக் கட்டுப்படுத்து !” என்று நம் அன்னை ஆதிபராசக்தி சொல்கிறாள்.

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
Uக்கம் – 273 + 274