ஓம் தண்ணார் அமுதத் தமிழே போற்றி ஓம்

0
1002

தமிழ் மொழியின் அருமையையும், சிறப்பையும் புலவர்கள் பல படப் பாராட்டுவர். செந்தமிழ், இசைத்தமிழ், மூத் தமிழ், தீந்தமிழ், வண்டமிழ், தேன் தமிழ், தண்டமிழ் என்றெல்லாம் புகழ் வர்.

தமிழின் ஒலி அமைப்பு, கேட்பதற்குக் குளிர்ச்சியாக இருக்கும். தண்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள். தமிழ்ச் சொற்கள் கேட்பதற்குக் குளிர்ச்சியைத் தரும்.

குமர குருபரர், மீனாட்சி அன்னையைப் புகழும் போது, “நறை பழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகும் நறும் சுவையே ” என்கிறார். (தமிழ்ப் பாடல்களில் இருந்து ஒழுகுகின்ற நறும் சுவை போன்றவளே – என்கிறார்.)

இந்த மந்திரம் அன்னையை, “அமுதத் தமிழாகவே “போற்றிப் புகழ்கிறது.

574. ஓம் மூலாதாரத்து மண்ணினை போற்றி ஓம் !

575 . ஓம் மணிபூரகந்தே நீரினை போற்றி ஓம் !

576. ஓம் சுவாதிட்டானத் தீயினை போற்றி ஓம் !

577. ஓம் அநாகதத் தே வளியினை போற்றி ஓம் !

578. ஓம் விசுத்தி தன்னில் வெளியினை போற்றி ஓம் !

579. ஓம் ஆஞ்ஞா வில்லுறை மனத்தினை போற்றி ஒம் !

580. ஓம் ஆயிர இதழ்நடு உடையாய் போற்றி ஓம் !

நமது உடம்பில் சக்தி வாய்ந்த மையங்கள் ஆறு இருக்கின்றன .இவற்றை ஆறாதாரச் சக்கரங்கள் என்பர். அவை :
1. மூலாதாரம்,
2. சுவாதிட்டானம்,
3. மணிபூரகம்,
4. அநாகதம்.
5. விசுத்தி,
6. ஆஞ்ஞை –

இவற்றுடன் உச்சந்தலையில் சகஸ்ர தளம் என்ற ஒன்றும் உண்டு. இதனை ஆயிரம் இதழ்க கமலம் என்றும் சொல்வர்.

இவற்றை ” ஏழு ஞான பூமிகள் ” என்று வேதாந்திகள் குறிப்பிடுவர்.

அண்டத்தில் உள்ள அனைத்தும், பிண்டமான நமது உடம்புக்குள்ளும் இருப்பதாகச் சொல்வர் –

அண்டம் பஞ்ச பூதங்களாக விரிந்திருப்பது போல, மனித உடம்பிலும் பஞ்ச பூதங்கள் கலந்து உள்ளன.

1. மூலாதாரத்தில் பூமி அல்லது நிலம் அல்லது மண் தத்துவம் இருக்கிறது. ஆதலின் ” மூலாதாரத்து மண்ணினை போற்றி ஓம் ” என மந்திரம் சொல்கிறது .

2. சுவாதிட்டானம் நீர் தத்துவம் கொண்டது என்பர். ஆதி சங்கரர் அது அக்கினி தத்துவம் உடையது எனத் , தமது செளந்தரிய லகரியில் குறிப்பிடுகிறார்.

3. மணிபூரகம் அக்கினி தத்துவம் கொண்டது என்பர். ஆனால், ஆதி சங்கரர் அது நீர் தத்துவம் உடையது என்கிறார்.

4. அநாகதம் வாயு அல்லது காற்றின் தத்துவம் உடையது.

5 – விசுத்தி ஆகாயத் தத்துவம் உடையது .

6. ஆஞ்ஞை என்ற புருவ மத்தி, மனத் தத்துவத்தின் இருப்பிடம்.

7. ஆயிரம் இதழ்க் கமலத்தில், பிரம்மம் உறைவதாகச் சொல்லப்படுகிறது – இங்குள்ள சக்கரங்கள் ஒளிமயமானவை –

மூலாதாரத்தையும், சுவாதிட்டானத்தையும் அக்கினி கண்டம் என்பர்.

மணிபூரகத்தையும், அநாகதத்தையும் சூரிய கண்டம் என்பர்.

விசுத்தியையும், ஆஞ்ஞையையும் சந்திர கண்டம் என்பர்.

மேற்காணும் ஆதாரங்களைப் பற்றிய கூடுதல் விளக்கங்கட்கு, 61 முதல் 68 வரை எண்களுள்ள மந்திரங்களில் காண்க.

581. ஓம் மூடனைக் கவியென ஆக்குவை போற்றி ஓம் !

அன்னை ஆதிபராசக்தி நினைத்தால், மூடனையும் கவிஞன் ஆக்குவாள்.

ஆடு, மாடு மேய்த்து வந்தவனைக் கவி காளிதாசனாக ஆக்கினாள்.

கும்பகோணத்தில் வைணவ வேதியர் மரபில் வந்தவர் வரதர். சீரங்கம் பெருமாள் கோவிலில், சமையற்காரா ராகத் தொழில் புரிந்து வந்தார். அகிலாண்டேஸ்வரி அவரது நாக்கில், வித்தைக்குரிய பீஜாட்சர மந்திரத்தை எழுதி, மறைத்து போனாள். அதன் பின், அவர் மிகப் பெரிய கவிஞர் ஆனார்.

582. ஓம் புல்லனைப் பேரரசாக்கு வை போற்றி ஒம் !

ஆதிபராசக்தி நினைத்தால், புல்லையைும் பேரரசனாக ஆக்குவாள். (புல்லன் – உடல் பலம் இல்லாதவன்)

583. ஒம் வறியனைச் செல்வன் ஆக்குவை போற்றி ஓம் !

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, வறுமை நிலையில் கிடந்த பலரைச் செல்வந்தர்களாக்கி இருக்கிறாள்.

மேல்மருவத்தூரில் ஒரு விழாவின் போது, ஒரு தொழிலதிபர் பேசினார்.

“பொறியியல் படிப்பு முடித்து விட்டுக் கையில் 500 ரூபாயை மட்டுமே வைத்துக் கொண்டு, எந்த வேலைக்குப் போவது ? யாரிடம் போவது ? என்று திசை தெரியாமல், மருவத்தூர் வந்தேன்.

வேலைக்குப் போக வேண்டாமடா, மகனே ! சுயமாக ஒரு தொழிலை நடத்து; 2 ன்னை உயர்த்துகிறேன் – என்றாள்.

அன்று 500 ரூபாயை வைத்துக் கொண்டு தடுமாறினேன்; இன்று 500 கோடி ரூபாய் சொத்துள்ள தொழிலதிபராக, என்னை உயர்த்தியவள் அன்னை தான் என்றார்; இந்த வாழ்வு அவள் போட்ட பிச்சை” என்று கூறினார். இவர் போலப் பலர் உண்டு!

584. ஓம் பிணியனை நலம் தந்தாள்வாய் போற்றி ஓம் !

உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மருந்து சொல்லியும், பரிகாரம் சொல்லியும், வெறும் பார்வையாலும், வாய் மொழியாலும் நோய் தீர்த்த அற்புதங்கள் ஆயிரம் உண்டு !

சக்தி ஒளி இதழ்களில் தங்கள் அனுபவங்கள், பக்தர்கள் எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் படித்து அறிக !

585. ஓம் வலக் கண் கதிரெனக் கொண்டாய் போற்றி ஓம் !

586. ஓம் இடக்கண் மதியெனக் கொண்டாய் போற்றி ஓம் !

அன்னை ஆதிபராசக்தியின் வலது கண்ணை, சூரியனாகச் சொல்வர் – (கதிர் -சூரியன்)

அன்னையின் இடது கண்ணைச் சந்திரனாகச் சொல்வர்.(மதி -சந்திரன்).

587. ஓம் வலக் கண் செந்நிறம் கொண்டாய் போற்றி ஓம் !

அன்னையின் வலது கண்ணில் சூரியன் இருப்பதால், அது செந்நிறம் கொண்டதாக இருக்கிறது –

588. ஓம் இடக்கண் வெண்ணிறம் கொண்டாய் போற்றி ஓம் !

அன்னையின் இடது கண்ணில் சந்திரன் இருப்பதால், அது பெண்ணிறம் கொண்டதாக இருக்கிறது.

589. ஓம் பாற்கடல் அறிதுயில் புரிவாய் போற்றி ஓம் !

அன்னை வசிக்கும் இடங்களில் ஸ்ரீ புரம் ஒன்று. அங்கு அமுதக் கடலின் நடுவே,அறிதுயில் புரிகிறாள் என்கிறது லலிதா சகஸ்ரநாமம். பாலையும் அமுதம் என்று சொல்வர்; ஆதலின், பாற்கடல் நடுவே அறிதுயில் புரிவதாக இம் மந்திரம் குறிப்பிடுகிறது.

590. ஓம் வேற்றுடங் கண்ணுடை வேணி போற்றி ஓம் !

(தடம் – அகன்ற ; வேணி – நீண்ட கூந்தல்)

வேல் போல அகன்ற கண்களைக் கொண்டவள் சுன்னை. விசாலாட்சி என்ற பெயர் அவளுக்கு உண்டு. விசாலமான _ அகன்ற கண்களை உடையவள். அவளது கண்ணழகைப் போற்றுகிறது இந்த மந்திரம் .

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 313 + 314 + 315 + 316