ஓம் பங்காரு அடிகளே ஓம்

0
453

8-4-17 நம் தொண்டர்கள் அம்மாவை வீட்டில் சென்று சந்தித்து சென்னையை இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்ற வேண்டியபோது அம்மா அவர்கள் அருளிய உபதேசங்கள்
தேங்காயை கடலில் காண்பித்து வழிபட்டு வரும் பௌர்ணமி அன்றே மருவத்தூரில் உடைக்க வேண்டும்.

கடன் வாங்கியாவது திரிசூல யாககுண்டம் கட்டி தேங்காய் பூ எடுத்து செல்ல வேண்டும்.

முக்கியமாக திரிசூலம் யாகம் செய்வதில் சென்னை அதிக அளவில் முதலாவதாக செய்ய வேண்டும்.

நல்ல மழை தருகிறேன் என்று உறுதியாக சொன்னார்கள்

செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.

தாய் தந்தையிடம் பேசதல் போன்ற அத்தியாவசியமானவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் லவ் ( காதல்) விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் சீரியல் கதைகளிலே மூழ்காமல் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை கூட்டு வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். மன்றங்களில் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்ய வேண்டும்.

ஒரு சொல் ஒரு குணம் ஒரு செயல் என்று இருக்க வேண்டும்.

கழுவாத பாத்திரத்தில் தண்ணீர் பிடித்தால் என்னாகும்? அதுபோல், மனதில் அழுக்கு (கெட்ட எண்ணங்கள்) சேர்ந்தால் என்னாகும்? மனதை அடிக்கடி சுத்தப்படுத்தி எண்ணங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

இயற்கை வழிபாடு அவசியம். கடல், கடல் என்று சொன்னால் கடவுள் என்று வரும். 1980களில் கடற்கரையில் ஆன்மிக மாநாடுகள் செய்த போதும், கடற்கரையில் சக்தி மாலை அணியும் விழாக்கள் நடத்திய போதும் இவ்வளவு இயற்கை சீற்றங்கள் இல்லாமல் இருந்தது.

சக்தி மாலை காலங்களில் அவ்வாறு செய்தால் சிறப்பு.

தெய்வத்தை வெளியே தேடாதீர்கள். உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது என்று சொல்லி தொண்டை குழியில் கை வைத்து காண்பித்தார்கள்.

தொடர் நாடகம் பார்ப்பதை விடுத்து வெள்ளிக்கிழமை வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும் என சொன்னார்கள்.

பெண்கள் அடுத்தவர் கதைகளை புறம் பேசுவதை கைவிட்டு விட வேண்டும். எல்லோருடைய ரெக்கார்டும் எனக்கு தெரியும். அதையெல்லாம் கூறினால்??!!

முன்பு சென்னையில் மழை வேண்டாம் என்று சொன்னார்கள். இப்பொழுது மழை வேண்டும் என்று நீங்கள் கேட்டு வந்துள்ளீர்கள். அம்மா கண்டிப்பாக மழை தருகிறேன்.

உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும். மாநாடு வைத்தால் எவ்வளவு பேர் வருவீர்கள்? ஏற்கனவே பார்த்த அடிகளார் தானே என்று சொல்லுவார்கள் தானே? இன்றெல்லாம் நடிகர்கள் வந்தால்தான் கூட்டம் வரும் என்று நகைச்சுவையோடு கூறினார்கள்.

பெண்களின் ஈடுபாட்டால்தான் நம் ஆலயம் வளர்ந்து உள்ளது. ஆண்களிடம் விட்டிருந்தால் மது, ஆட்டம், பாட்டம் என்று போயிருப்பார்கள்.

இப்பொழுது இது பெண்கள் கோவில் என்றே பெயர் வந்துவிட்டது.

சக்தி என்பதில் உள்ள ‘க்’ எடுத்தால் சதி என்று ஆகிவிடும். அதுபோலவே அம்மா இல்லையென்றால் மெய்யும் இல்லை உயிரும் இல்லை.

கடிவாளத்தை எடுத்து விட்டால் குதிரை வழிமாறி போவது போல கட்டுப்பாடு இல்லையென்றால் மனம் அலைப்பாயும். அவ்வாறு எண்ணங்கள் மாறும்போது (முக்கியமாக படிக்கும் பிள்ளைகள்) ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு உள்ளங்கைகளின் நடுவில் வைத்து உருட்டினால் மனம் ஒருநிலைப்படும்; சுத்தமாகும்.

அம்மா அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள்!

ஓம்சக்தி!