ஓம் பூரித் தலத்தே பைரவி போற்றி ஓம்

0
379

ஒரிசா மாநிலத்தில் உள்ளது பூரி. அங்கே ஜகநாதர் ஆலயத்தின் அருகே புவனேஸ்வரி கோயில் இருப்பதாகச் சொல்வார். தேவியின் இடுப்பு விழுந்த இடம் என்பர். ஜகநாதர் கோயிலில் விமலா தேவி கோயில் ஒன்றும் உள்ளது. ஆதிசங்கரர் நிறுவிய இடம் என்பர்.

656. ஓம் திருவெண் காட்டுறை திருவே போற்றி ஓம்!

தஞ்சை மாவட்டத்தில் உள்ளது திருவெண்காடு . இங்குள்ள இறைவிக்குப் பிரம வித்யா நாயகி எனப் பெயர்.

தன்னை வழிபட்ட பிரம்மனுக்கு. அம்பாள் வித்யை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்கு பிரம வித்யா நாயகி என்ற பெயர் வந்தது என்பர்.

657 ஓம் சீர்சயிலத்துறை சேயிழை போற்றி ஓம்!

ஆந்திர மாநிலத்தில் உள்ளது ஶ்ரீ சைலம் . இங்கே பிரமராம்பாள் என்ற திருப்பெயரில் வீற்றிருப்பவள் . தேவியின் கழுத்தின் கீழ்ப்பகுதி விழுந்த இடம் என்பர்.

658. ஓம் விருந்தா வனத்துக் கண்ணி போற்றி ஓம்!

விருந்தாவனம் என்பது பிருந்தாவனத்தைக் குறிக்கும் .வட மதுரையில் இருப்பது . தேவியின் கேசங்கள் விழுந்த இடம் இது என்பர்.

659. ஓம் அத்தின புரத்தே அமர்ந்தாய் போற்றி ஓம்!

அஸ்தினாபுரம் என்பது அத்தினாபுரம் என்று இங்கு குறிப்பிடப்பட்டது. இங்கு தேவி ஜெயந்தி என்ற திருப்பெயருடன் விளங்குகிறாள்.

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்

பக்கம் _340-341