ஓம் மறவாநினைவை தருவாய் போற்றி ஓம்!

0
987

தமது மரண காலத்தில், தமது வழிபடும் தெய்வத்தின் நினைவு வர வேண்டும் என்று பக்தர்கள் விரும்புவது இயல்பு.

உயிரை கவருவதற்காக எம தூதர்கள வருவார் அப்போது உயிர் புரியும் போது மிகப் பெரிய வேதனையாக இருக்கும் ஒவ்வொரு புலனும் ஒடிங்கி கொண்டே இருக்கும். மூச்சு விட முடியாமல் திரண வேண்டி இருக்கும். அந்த வேதனையில் தெய்வ நினைப்பு வராது. எனவே அடியார்கள் கடவுளை அந்த மரண அவஸ்தையில் உன்னை நினைக்கும் நினைப்பு வருமோ வராதோ? அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன். நீ என் மனதில் வந்து குடி ஏற வேண்டும். உனது நினைவு எனக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

அர்ஜனா! எந்த மனிதன் என்னை நினைத்து கெண்டு உயிர் விடுகிறானோ அவன் எனது சொரூபத்தையே(ஔி வடிவத்தையே) அடைகிறோன்.(8.5 )

மரண தருவாயில் எந்தெந்த சொரூபத்தை சிந்தித்த வண்ணம் உயிர் துறக்கிறானோ அவன் அந்தந்த சொரூபத்தை அடைகிறான்.(8.6)

ஆகாயால் அர்ஜனா நீ எல்லா காலங்களிலும் என்னையே நினைத்து கொண்டு இரு!

என்னிடத்தில் அர்பணம் செய்யப்பட்ட மனம் புத்தியுடன் கூடியவனாக இருந்தால் என்னையே அடைவாய் அதில் சந்தேகமே இல்லை(8.7)

-என கண்ணன் கிதையில் உரைக்கிறார்.

புழுவாய் பிறக்கினும் புண்ணியா!
உன்னடி என் மனத்தை
வலுவாதிருக்க மனம் தர வேண்டும்

-என திருநாவுகரசர் வேண்டுகிறார்.

புவி அழுகின்ற பேிதில் கடப்பமலர் கண்ணி காக்க!
ஆவி சோர்ந்து நிற்கும் காலை ஆதிபராசக்தி காக்க!
நவடக்கி விழிகள் ஏறி நாற்புறமும் மக்கள் சூழ தேவிநின் மருவூர் எண்ணம் திரையாமல் தாயே காக்க!

-என சக்தி கவசப் பாடல் வேண்டுகிறது.

தாயே! எனது உயிர் பிரியும் காலத்திலும், மறு பிறவி வாய்த்த காலத்திலும் உன் நினைவு எனக்கு இருந்த படியே இருக்க வேண்டும் என இந்த மந்திரம் வேண்டுகிறது.

1008 போற்றி மலர்கள் நூல் பக்கம்: 321