ஓம் மாலயன் தொழவருள் மங்காய் போற்றி ஓம்!

0
1612

மால் – திருமால்; அயன் – பிரம்மா

திருமால் காத்தல் தொழிலை மேற்கொண்டவர். பிரம்மா படைக்கும் தொழிலை மேற்கொண்டவர். இருவருமே தேவியைத் தொழுது, அவள் அருள் பெற்றே தம் தொழில்களை இனிது நடத்துகின்றனர்.

56. குண்டலி மறைகளைக் காப்பாய் போற்றி ஓம்!

தேவியின் சூக்கும வடிவம் இருவகை 1)மந்திர மயமானது 2) குண்டலினி சக்தி வடிவானது.

மனித உடம்பில் மூலாதாரம் என்ற பகுதியில், குண்டலினி என்னும் சக்தி, பாம்பைப் போல சுருண்டு படுத்திருக்கிறது என்றும், அதனை யோக சக்தியால் எழுப்பி, சகஸ்ராரம் எனப்படும் உச்சந்தலைக்கு எழுப்புவர் என்றும், அதனால் ஒரு யோகிக்கு ப்ரம்பொருளை உணரும் அனுபவம் கிடைக்கும் என்று யோக நூல்கள் கூறுகின்றன.

குண்டலினி சக்தி முழுதும் பயன்படாமல், உறங்கும் நிலையில் இருப்பது ஏன்? அதனை ஒரு யோகி எப்படி எழுப்புகிறார்? அவ்வாறு எழுந்த குண்டலினி சக்தி எப்படி சித்திகளாக அருள்கிறது? என்று எவரும் தெளிவுடன் கூறுவதில்லை. இவை பற்றிய நுட்பங்கள் ரகசிய மொழியில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு அதன் ரகசியத்தைக் காப்பவள் தேவி!

57. ஓம் மறையுள மறைகளைக் காப்பாய் போற்றி ஓம்!

மறை என்பது வேதங்களைக் குறிக்கும். மறைகளில் உபநிடதம் என்ற ஒரு பகுதி உண்டு. அவை வேதங்கட்கு, முடிவான உண்மைகளைக் கூறும். இவ் உபநிடதங்களைப் பக்குவமாகனவர்க்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் ஆராய்ந்து, அனுபவத்தில் கண்ட உண்மைகளைக் கூறுவன.

ஆதலின் வேதங்களில் உள்ள அத்தகைய மறைவான ரகசியங்களைக் காப்பவள் தேவி.

1008 போற்றி மலர்கள் விளக்கவுரை நூல்
பக்கம் (16)