ஓம் வானில் கலப்பை வைத்தாய் போற்றி ஓம் !

0
1166

ஐம்பூதங்களில் ஆகாயத்திலிருந்தே, ஏனைய நான்கு பூதங்கள் வெளிப்பட்டன –

உலகம் ஒடுங்கும் போது, ஆகாயத்தில் ஒவ்வொன்றாக கலந்து ஒடுங்கும்.

“பிரம்மம் எனப்படும் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று; ஆகாசத்திலிருந்து காற்று உண்டாயிற்று; காற்றிலிருந்து நெருப்பு உண்டாயிற்று; நெருப்பிலிருந்து நீர் உண்டாயிற்று; நீரிலிருந்து நிலம் உண்டாயிற்று.

நிலத்திலிருந்து மூலிகைகள் உண்டாயின; மூலிகையிலிருந்து அன்னம் உண்டாயிற்று, அன்னத்திலிருந்து மனிதன் உண்டாயினன்.-என்கிறது தைத்திரிய உபநிடதம் –

மற்ற நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களும் , தன்னில் கலந்து போக இடமளிப்பதால், வானில் கலப்பை (கலப்பது) வைத்தாய் போற்றி ஓம் என இம் மந்திரம் கூறுகிறது.

521. ஓம் காலின் ஊக்கம் கண்டாய் போற்றி ஓம் !

“கால் ” என்பது காற்றைக் குறிக்கும் .காற்று, மெல்லிய பூங்காற்றாகவும் விளங்குகிறது; வலிமை பெற்று, புயலாகவும், சூறாவளியாகவும் வீசுகிறது. அக்காற்று, விரைந்தடித்தல் என்றும் வேகம் அல்லது ஊக்கம் பெற்றும் வீசுகிறது.

அந்தக் காற்றாகவும் இருப்பவள் அன்னை !

தாயே ! நீ சூரியனிடத்தில் ஒளியை உண்டு பண்ணியுள்ளாய் ; சந்திரனிடத்தில் குளிர்ச்சி அமைத்திருக்கிறாய்; நெருப்பில் வெப்பத்தைத் தோன்றச் செய்தாய்; ஆகாயத்தில் வியாபகத் தன்மையை அமைந்திருக்கிறாய். காற்றில் விரைந்து வீசும் படி ஊக்கத்தைக் கொடுத்துள்ளாய் என மேற்கண்ட மந்திரங்கள் போற்றுகின்றன.

522. ஓம் நீரினில் இன்சுவை நிகழ்த்தினை போற்றி ஓம் !

தண்ணீரை, வானத்திலிருந்து பொழியும் அமுதம் என்பார் திருவள்ளுவர்.நீரினில் இன்சுவை சேர்த்து வழங்கியிருக்கிறாள் அன்னை –

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 261