கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்

0
330

” தாயே ! இந்த நாட்டில் இவ்வளவு அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றனவே, இவ்வளவையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாய் ? ” என்று கேட்டார் ஒருவர். அவருக்கு அன்னை சொன்னது இது !

” என்ன செய்வது மகனே ! நீ கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய். உலகெங்கும் தீமையும், அக்கிரமங்களும் நடக்கிறதே என்று நீ மட்டும் கவலைப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. வெயில் கொடுமையாகத் தான் இருக்கிறது. தாயே ! நான் என்ன செய்வேன் ? என்று என்னிடம் வந்தால் வெயில் கொடுமை தாக்காதவாறு உனக்கு குடை கொடுப்பேன். நிழல் பெறச் செய்வேன். நீ நிழலில் நடந்து போகலாம். தாயை நோக்கி வருபவனுக்குத் தான் நான் குடை அளிக்க முடியும். என்னிடம் வரவே விரும்பாதவனுக்கு நான் என்ன செய்ய முடியும் ? ” என்றாள்.

-தல வரலாறு பாகம் -1