சமுதாயம் ஒழுங்குபட

0
360

“ஒருவன் புதிதாக மாடு ஒன்று வாங்கினான். அந்த மாட்டை ஓட்டிக் கொண்டு தனது வீட்டிற்குப் போக முயற்சி செய்தான். மாடு அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்தது. இவனால் மாட்டை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை.

அப்பொழுது, அவ்வழியே புல் விற்கும் ஒரு பெண் புல்லுக்கட்டைச் சுமந்து சென்று கொண்டிருந்தாள்.

இதுவரையில் துள்ளி ஓடிக் கொண்டிருந்த மாடு, புல்லுக் கட்டைக் கண்டவுடன் அந்த பெண்ணின் பின்னாலேயே சென்றது.

அப்போதுதான் மாடு வாங்கியவன் ஓர் உண்மையை உணர்ந்து கொண்டான்.

மாட்டின் முன் புல்லைக் காட்டினால் மாடு தானாக வரும் என்பதை அறிந்து கொண்டான்.

அதுபோல இந்தச் சமுதாயம் உன்னைப் பின்பற்றாமல் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறதென்றும், தரங்கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறதென்றும் நீ கவலைப்படாதே..

நீ ஈரமான தொண்டு என்னும் பச்சைப் புல்லைக் கையில் வைத்துக் கொள்! அந்தத் தொண்டைப் பார்த்துப் பார்த்து இச்சமுதாயமானது ஒழுங்காகப் பின்பற்றும்.”

அன்னையின் அருள்வாக்கு.