தீய பழக்க அடிமைத் தனத்தை மாற்றிய அன்னை

0
668

கடந்த 14 வருடங்களாக நான் பான்பராக் பாக்கிற்கும், அதன்பின் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தேன். மிகவும் வேதனைப்பட்ட எனது குடும்பத்தார் அம்மாவிடம் பலமுறை முறையிட்ட பின்பும் என் வினைப்பயன் காரணமாக இந்தத் தீய பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் இருந்தேன்.என் உடல் நிலையும் பாதிப்படைந்தது.

இந்த நிலையில் மீண்டும் அம்மாவிடம் பாதபூஜையின்போது எனது குடும்பத்தினரும் நானும் இந்த தீய பழக்கத்திலிருந்து மீண்டுவர நீங்கள்தான் அருள்புரிய வேண்டும். உங்களால் மட்டும்தான் முடியும் என்று வேண்டினோம்.அம்மா அப்போது மௌனம் நவராத்திரியின்போது ஒன்பது அபிடேகம், ஒன்பது காப்பிற்கு பதிவு செய்யுங்கள். அந்தப் பழக்கத்தை அப்படியே இறக்கி விடுகிறேன் என்று சைகையில் கூறினார்கள்.

அதன்பின்பு ஒருவாரம் ஆலயத்தில் வந்து தங்கி இருக்கச் சொன்னார்கள். அதன்படி ஆலயத்தில் வந்து இருந்தோம்.

அன்னையின் அருளால் நான் தற்போது எந்தத் தீயபழக்கமும் இல்லாமல் முழுமையாக மாறிவிட்டேன்.

அம்மாவிடம் சரணாகதி அடைந்தவர்களை அம்மா ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். அம்மாவிற்கு கோடானு கோடி நன்றி.