தூத்துக்குடியைச் சேர்ந்த தொண்டர்

0
297

தூத்துக்குடியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் அம்மாவுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற ஊரிலிருந்து மருவத்தூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.மதுரை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது,ஒரு மரத்தின் அடியே ஒரு பிணமும்,அதனை சுற்றி நான்கைந்து பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பதை தொண்டர் கண்டார்.

விசாரித்ததில் அது ஒரு அநாதை பிணம் என்றும்,காவல்துறைக்கு தெரிவித்துள்ளதாகவும்,அவர்கள் வந்து என்னமோ செய்து கொள்ளட்டும் என்றும் ஒதுங்கியிருந்தனர்.அவ்வூர் மக்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.உடனே தொண்டர் பேருந்து பயணத்தை தொடர மனம் வரவில்லை.பேருந்திலிருந்து இறங்கியவர் நேராக அவ்வூர் பஞ்சாயத்து தலைவரை,விசாரித்து,தொடர்பு கொண்டு,அவரிடம்,அநாதை பிணத்தை அடக்கம் செய்வது புண்ணிய பலனைத் தரும் என்றெல்லாம் விளக்கமாக கூறினார்.உடனே அவரும் ஊர்மக்களும் காவல்துறையின் அனுமதி பெற்று,அநாதை பிணத்தை மரியாதையுடன் அடக்கம் செய்ய ஒத்துழைத்தனர்.பிறகு தொண்டர் மருவத்தூருக்கு கிளம்பி வந்தார்.

இவர் வந்து சேர்ந்த நேரம் அம்மாவுக்கு பாதபூஜை செய்யப்பட்டு அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார்கள்.இவர் உடனே சீக்கிரமாக குளித்துவிட்டு வரலாம் எனக் கிளம்பினார்.ஒருவர் வந்து அம்மா உங்களை அழைக்கிறார்கள் என்று கூறி அன்னையிடம் அழைத்துச் சென்றார்.அம்மா கூறினார்களாம் உனது அநாதை பிண அடக்கம் எனும் உயர்ந்த தொண்டை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன் என்றார்கள்.இவரோ அம்மா நான் இன்னும் குளிக்கவே இல்லை,அதனால் உங்கள் முன்னால் இருக்க உதறலாக உள்ளது என்று கூறினார்.அம்மா கூறினார்கள், நீ செய்த அந்த தொண்டு 3 கும்பாபிடேகங்களை தரிசித்த புண்ணிய பலன் உடையது என்று.

தொண்டர் மேலும் கேட்டார்,அம்மா நிறைய பேர் வெளியே காத்துக் கொண்டுள்ளார்கள் என்னை நீங்கள் முதலிலேயே கூப்பிட்டுவிட்டீர்களே என்று.அம்மா கூறினார்கள் அவனவன் தனது சாராய கடை,பிராந்தி கடை சிறப்பாக நடக்க,தத்தமது சுயநலன்களுக்காக காத்துக் கொண்டுள்ளார்கள்.ஆனால் நீ அநாதை பிண அடக்கம் எனும் உயர்ந்த தொண்டை செய்து வந்துள்ளாய்.எனவே உன்னை முதலில் அழைத்தேன் என்று அருளாசி வழங்கி அனுப்பினார்கள்.


ஆம் அம்மா தொண்டுக்கு உடனே மனமிறங்கி அருள்புரிகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.