தொண்டு என்பது இங்கே தெய்வப்பணி

0
328

நீங்கள் இங்கே செய்யும் தொண்டு தெய்வப்பணி. இந்தப் பணியில் ஈடுபடும் போது அதற்குத் தகுதியாக நடந்து கொள்ள வேண்டும். அவன் அப்படி, இவன் இப்படி, அவள் அப்படி, இவள் இப்படி என்று புறம்பேசுவதும், கோள் சொல்வதும் பாவம் என்று தெரிவதில்லை. புண்ணியம் சம்பாதிக்காமல் பாவத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது. வந்தோமா? ஒரு தொண்டு செய்தோமா? என்று இருக்க வேண்டும்.”

– அன்னையின் அருள்வாக்கு