தோத்திரம், மந்திரம், தியானம்.

0
982

மேல் மருவத்தூர் சக்தி உபாசகர் அருள்திரு பங்காரு அடிகளார்.

தோத்திரம், மந்திரம், தியானம்.

தோத்திரம்

கருத்தரிக்கும் முன்பி ருந்தே
‘கன்னியவள்” அருளைப் பெற்றாய்!
உருத்தரிக்கும் முன்பி ருந்தே
‘உத்தமியாள்” உறவைப் பெற்றாய்!
அருள்தரிக்கும் முன்பி ருந்தே
‘அவள்” பாம்பாய் ஊரப் பெற்றாய்!
பொருள்தரிக்கும் மனமில் லாமல்
புகழ்மகனாய்ப் பூத்தே நின்றாய்!

முன்பிறவி சித்தனென மொய்ம்பில் ஆகி,
‘முனைச்சுழியின் விழிகடந்த ஞானத் தீயால்
தன்பிறவி வினைமுடிக்கும் காஞ்சி மேலோன்”
தனிப்பிறவி யுடனிருந்த தவத்தன் ஆனாய்!
உன்குடும்ப வளர்வினிலும் உயர்ந்த ‘ஞான
ஒளிக்குடும்ப வளர்”வினையே நாளும் செய்வாய்!
பண்மலர்க்கும் பாமொழியால் பலநூ றான
பாமணமும் பாதமணம் பற்றப் போமோ!

காலத்தால் இடத்தால் உண்மை
காணொணாச் சக்தி தன்னை,
சீலத்தரில் பக்தி தன்னால்
திருவருள் கூட்டக் கண்டாய்!
ஆலகத்தை அமுதா யாக்கும்
ஆதிபரா சக்தி பாலா!
தூலத்தால் தாயைக் கண்டே
தொடர்வினை மடிப்போம் போற்றி!!

கவிஞர், காவிரிமைந்தன்,எம்.ஏ.,

ஓம் சக்தி
நன்றி: சக்திஒளி
பக் 8 (1982)