நவராத்திரிக் காப்பின் மகிமை

0
409

கடந்த 5 வருடமாக என் இளைய மகனுக்கு வரன் பார்த்து வருகிறேன். எந்த வரன் வந்தாலும், பொருத்தம் இல்லாமல் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது. ஒரு சமயம் அன்னை ஆதிபராசக்திக்கு (அருள்திரு அடிகளார் அவர்களுக்கு) பாத பூஜை செய்யும் பொழுது வருகிற 2015ஆம் ஆண்டு நவராத்திரி காப்பு(ஒன்பது காப்பு) கலந்து கொள்ளும்படி ஒன்பது காப்பில் கலந்து கொண்டோம்.

ஒன்பது காப்பு நவராத்திரி பூஜையில் கலந்தவுடன் அதன் பிறகு வந்த வரன் எங்களுக்குப் பொருத்தமாக இருந்தது. மீண்டும் அன்னை ஆதிபராசக்திக்கு(அருள்திரு அடிகளார் அவர்களுக்கு) பாதபூஜை செய்து கேட்டோம்.

அன்னையும்(அருள்திரு அடிகளார்) உத்தரவு கொடுத்தார்கள். திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தது. திருமணம் முடிந்த பிறகுஅன்னை ஆதிபராசக்திக்கு(அருள்திரு அடிகளார் அவர்களுக்கு) பாதபூஜை செய்தோம். அன்னை ஆதிபராசக்திக்கு(அருள்திரு அடிகளார் அவர்கள்) மணமக்களை சிறப்பாக வாழ்த்தினார்கள்.

அன்னை ஆதிபராசக்திக்கு(அருள்திரு அடிகளார் அவர்கள்) ஆசியும் கிடைத்தது. மேலும் அன்னை( அருள்திரு அடிகளார் அவர்கள்) அடுத்த வருகிற ஆண்டும் நவராத்திரி காப்பில் கலந்து கொண்டோம். என் மகனும் மருமகளும் மிகவும் சிறப்பாக வாழ்கிறார்கள்.

சக்தி. ஜி. ஜெயலட்சுமி, சென்னை.

பக்கம்:47.

சக்தி ஒளி ,செப்டம்பர்-2017.