நான் என்ற ஈரம் போனால் ????

0
2291

பச்சைக் கட்டைகளை தண்ணீரில் போட்டால் என்ன ஆகும்?

மூழ்கிவிடும்! ……தொண்டர்கள்

.நன்றாக காய்ந்த கட்டைகளை தண்ணீரில் போட்டால் என்ன ஆகும்?

“மிதக்கும்!” ……தொண்டர்கள்

*நாமும் அந்த கட்டை போலத்தான். காய்ந்த கட்டைகள் போல நாமெல்லாம் ஆனந்தமாக மிதந்தபடி கிடக்கலாம்.*

*ஆனால் முடியவில்லை. ஏன்? நம்மிடம் “நான்” என்ற ஈரம் கிடக்கிறது. அதனால் மூழ்கி விடுகிறோம்.*

அந்த நான் என்ற “ஈரம்” நம்மிடமிருந்து போக வேண்டும்.காய்ந்த கட்டையை போல நாம் மாற வேண்டும். எப்படி மாறுவது?.

*பக்தி! தொண்டு! மூலமாக “நான்” என்பதை போக்கி கொள்ள வேண்டும்.*

வேதனை…. சோதனைகள் என்ற வெப்பத்தால்தான் அந்த “நான்” என்ற மனப்பான்மை – அந்த ஈரம் காய்ந்து போகும்.

அந்த ஈரம் போனபிறகு அது மிதக்கும் தகுதி பெறுகிறது.

அப்படி ஈரம் போன கட்டைகள் ஒன்று சேர்ந்தால் அதன் மேல் ஏறிக் கொண்டு பலரும் மிதக்கலாம்.

அந்த தகுதி வாய்ந்த கட்டைகளாக அன்னை உங்களையெல்லாம் பழக்கி கொண்டு வருகிறாள்.

*அந்த நான் என்ற ஈரம் போக வேண்டியே உங்களுக்கு வேதனைகள்! சோதனைகள்!.*

*என்னுள்ளே நீ..*
*அந்த நான் ஒன்று இல்லை எனில் எனக்குள் நீயும், உனக்குள் நானும் இருப்பதை உணர முடியும்.*

எல்லோருக்குள்ளேயும் அம்மா இருக்கிறாள், அதை உணர முடியாதபடி “நான்” என்பது தடை செய்கிறது. அனைத்தும் அம்மாவே என்கிறார்கள்.

–அம்மாவின் அருள்வாக்கு..