பரமாத்மாவும் ஜீவாத்மாவும்

0
513

நீங்கள் ஜீவாத்மா….அம்மா பரமாத்மா…*
*அவளிடமிருந்து சிதறி வந்த பொறி.*

ஏதோ ஒரு கர்மம்! ஏதோ ஒரு அஞ்ஞானம்! பிரிந்து வந்து விட்டீர்கள். அவளும் பிரித்துக் கொண்டு இந்த பிரபஞ்ச விளையாட்டை நடத்துகிறாள். தன் மூலஸ்தானத்தைத் தேடிச் சென்று ஒட்டிக் கொள்ள ஜீவாத்மா உள்ளே தவிக்கிறது. துடிக்கிறது, அழுகிறது, கண்கலங்குகிறது.

*பரமாத்மாவும் இப்படி ஓர் ஏக்கத்தை வளர விட்டு வேடிக்கை பார்க்கிறது.*

ஜீவாத்மாவின் தவிப்பு, ஏக்கம் எல்லை மீறும்போது ஓடி வந்து சில தெய்வ அனுபவங்களைக் கொடுத்து ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
பரவசப்படுத்துகிறது.

இறுதியில் தன்னோடு ஜீவாத்மாவை ஜோதியில் கரைத்துக் கொள்கிறது. இந்த விளையாட்டை எல்லாம் மற்ற காலங்களில் எங்கோ, எப்போதோ – லட்சத்தில் ஒரு சில ஆன்மாக்களோடு மட்டுமே நடக்கும்.

இது அவதார காலம்! எனவே ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை இழுத்துப் பிடித்து தெய்வ விளையாட்டு செய்வாள்…

அம்மாவின் சித்தாடல்…