மந்திரங்களின் மகத்துவம்

4
2085
 • எவன் ஒருவன் என் மூலமந்திரத்தை இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு பல அற்புதங்களை நடத்திக் காட்டுவேன்.

 • நீ சொல்வது மூல மந்திரம். அது என்னுடைய மந்திரம். அதற்குத் தனிப் பலன் உண்டு.
 • படிக்கப் படிக்க மனதில் அவை பதிவது போல மந்திரம் படிக்கப் படிக்க என்னிடம் மதிப்பெண் பெறுவாய்.
 • நீ மருவத்துார் வரும்போதெல்லாம் சப்த கன்னியா் சந்நிதியில் ஒவ்வொரு தேவியின் இடத்திலும் நின்று மூலமந்திரம் சொல்லு.
 • அடிகளார் போற்றி மூன்று தடவை படித்துவிட்டு தினமும் படுத்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும். இம் முயற்சியில் வெற்றி பெற்ற ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை.
 • நீ தினமும் சென்று வேலையில் அமரும்
  பொழுதும், அங்கிருந்து வீட்டுக்குச் செல்லும் போதும் ஒன்பது முறை ஓம் சக்தி சொல்லிவிட்டுச் செய்.
 • மந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.
 • கஷ்டம் வரும்போதெல்லாம் மந்திர நுால் படி! எல்லாவற்றையும் உரு ஏற்று.
 • ஓம் சக்தி மந்திரந்தான் உனக்கு தாரக மந்திரம்.
 • வேண்டுதற்கூறு படித்து வந்தால் வேண்டியது கிடைக்கும்.
 • 108, 1008 படித்து வந்தால் நீ வசிக்கும் மனை விளங்கும். மனையும் வாங்கலாம்.
 • எவனொருவன் அடிகளார் 108 போற்றி, 1008 போற்றி படித்து வருகிறானோ அவனுக்கு பாவவிமோசனமடா!
 • கிருத்திகை நாளில் நீ தியானம், மௌனம், விரதம் எதுவும் செய்ய வேண்டாம். அடிகளார் 108 போற்றியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கவும்.
 • ஒரு நல்ல காரியம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் ஒரு தாளை எடுத்துச் சதுரமாக மூலமந்திரம் எழுதவும். பெண்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானாலும் ஒரு தாளில் முக்கோண வடிவில் மூலமந்திரம் எழுதவும். தனியிடம் அமர்ந்து செய்ய வேண்டும்.
 • எனது மந்திரம் படிப்பவர்களுக்குத்தான் இனிமேல் காலம். அது பொன்னான காலம். அது பொன்னான காலம் என்பதை விடப் பொன்னான வாழ்வு என்று சொல்லலாம்.
 • அர்ச்சனை- அபிடேகம்- ஆராதனை- மந்திரம்- இவையெல்லாம் எதற்காக? ஆன்மாவும் மனமும் குளிர்வதற்காக! மந்திரங்களை மனதிற்குள் படித்தாலும் போதும்.
 • வீட்டு மனை வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாமல் தரிசாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் அங்கே மஞ்சள் நீர் தெளித்து 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து 1008 மந்திரம் படித்து வழிபாடு செய்து வந்தால் வேலைகள் சரிவர நடக்கும்.
 • நல்ல
  நாளும் கிழமையும் வரும்போது சக்தியை வழிபடுகிறவர்கள் காலை, மாலை கோலம் போட்டு எலுமிச்சம் பழ விளக்கேற்றி வைப்பது நல்லது.
 • யாராவது உன்னைத் திட்டினால் எதிர்த்துப் பேசாதே! மூல மந்திரம் சொல்!
 • ஒரு மனிதனுக்கு உயிர்ப்பு நுால் மந்திர நுால்! அது போதுமடா! வேறெதுவும் தேவையில்லை! நீ இங்கு கோயிலில் இருப்பது சில நேரந்தான். அந்த நேரங்களில் மூலமந்திரம் சொல்லிக் கொண்டே இரு.
 • உனக்கு உடம்பு சரியில்லை என்றால் சக்தி கவசம் படி.
 • நினைத்தது நிறைவேற வேண்டுமாயின் 51 தடவை அடிகளார் 108 போற்றி படி.
 • விடியற்காலை 5.00 மணிக்கு எழுந்து 108 படித்து வழிபாடு செய்வது ஒரு வேள்வி செய்வதற்குச் சமம்.
 • அடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல். அதன் அருமை யாருக்கும் தெரியாது.                       

                                             -ஆன்மிக குரு அருளியவை.

                                               -ஆதாரம் – சக்தி ஒளி (டிசம்பர்99)

4 COMMENTS

 1. அடிகளார் 108 போற்றி பாடல் எழுத்து வடிவில் வேண்டும் கிடைக்குமா?

 2. Amma en kalavil varam thanthai ninaivil eppothu tharuvai un mulamanthiram naan sollatha nal ella enaku arul purivai amma en kanabu nerai vera vendum amma arulpuri amma

 3. Amma enaku kanavil varam thanthai nesathil eppothu tharuvai amma un mulamanthiram sollatha nal ella enaku arul purivai amma un karanai malai polivai amma enaku varam tha amma en venduthal nerai vethu amma

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.