மாங்கல்யம் காத்த கலச தீா்த்தம்

0
490

என் கணவருக்கு மஞ்சள் காமாலை

1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. ஆகையால் வேலுாருக்கு அனுப்பினார்கள். அங்கு சென்ற பிறகு மஞ்சள் காமாலை அதிகமாகிவிட்டது.

டாக்டா்கள் சொன்னது

நாங்கள் முடிந்தவரைக்கும் பார்த்து விட்டோம். இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். என்று சொல்லி மீண்டும் மதுரைக்கே போகும்படி வேலுார் டாக்டா்கள் சொல்லி விட்டார்கள்.

வேலுாரில் ஒரு மாதம் இருந்தோம்.வேலுாருக்குப் போவதற்கு முன்பு இருந்த உடல்நலம் கூட இல்லாமல் என் கணவரின் வயிறு வீங்கி விட்டது. சிறுநீா் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார். மிகவும் மோசமான நிலையில் அவரை மதுரைக்கு அழைத்து வந்தோம்.

இரண்டு மாதங்களாக ஒன்றும் சாப்பிட முடியாமல் சீறுநீா் பிரியாமல் இட்லி சாப்பிட்டாலும் உடல் ஒத்துக்கொள்ளாமல் என்னுடைய கணவா் மிகவும் கஷ்டப்பட்டார்.

மதுரை டாக்டா் சொல்லியது

மீண்டும் மதுரை வந்தோம். மதுரை டாக்டரும்“ என்னால் முடிந்தவரையில் பார்க்கிறேன். God is great
”என்று சொல்லி விட்டார்.

இந்த நிலையில் என்ன செய்வது? என்று எங்கட்குத் தெரியவில்லை.

மாங்கல்ய பாக்கியம் தருவாள்

எங்கள் மருமகளின் தாயாரும் தகப்பனாரும் இவரைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அவா்கள் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பக்தா்கள். அவா்கள் என் கணவா் உடல் நிலையைக் கண்டு “நீங்கள் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மாவை வேண்டிக் கொள்ளுங்கள். அவள் கட்டாயம் உங்கட்கு மாங்கல்ய பாக்கியம் தருவாள்” என்று என்னிடம் கூறினார்கள்.

கலச தீா்த்தம்

நானும், அவருடைய அண்ணியும் மேல்மருவத்துார் அம்மா படத்தின் முன் கலச தீா்த்தத்தை வைத்து வேண்டிக் கொண்டு அவருக்கு உடம்பு குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கலச தீா்த்தத்தையும், குங்குமத்தையும் அவருக்குக் கொடுத்தேன்.

அதே நேரம் எங்களுடைய ஆடிட்டரும் ஆதிபராசக்தி மன்றத்திலிருந்து கலச தீா்த்தம், குங்குமம், வேப்பிலை கொடுத்து உண்ணச் செய்தார்கள்.

டாக்டா் கலச தீா்த்தம் தடவியது

அன்றைய தினமே ஆதிபராசக்தி பக்தரான டாக்டா் கோகுல்தாஸ் அவா்களும் “இவருக்கு நோய் குணமாகும்” என்று கூறிக் கலச தீா்த்தத்தை இவருடைய வயிற்றில் தடவினார்கள்.

கலச தீா்த்தத்தின் மகிமை

மறுநாள் இதுவரை சீறுநீா் பிரியாமல் கஷ்டப்பட்ட நிலை மாறியது. அந்த ஒரே இரவில் மூன்று லிட்டா் சிறுநீா் போனது.

இவரைப் பார்த்த டாக்டரும் மிகவும் ஆச்சரியப்பட்டு “அம்மாவின் சக்திதான் இவரைக் குணப்படுத்திவிட்டது” என்று சொன்னார்.

இரண்டு மாதமாக ஒன்றும் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்ட என் கணவா் ஆதிபராசக்தி
அம்மாவின் கருணையால் நோய் குணமாகி அன்றைய தினத்திலிருந்து நன்றாகச் சாப்பிடி ஆரம்பித்தார். தெம்பாக அருந்தார்.

என்னுடைய மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொடுத்த மேல்மருவத்துார் அம்மாவிற்கு நாங்கள் என்றும் அடிமைகள்

நாங்கள் வேண்டிக்கொண்டபடி இவருக்குக் குணமானதும்,மேல்மருவத்துார்  சென்று அங்கப்பிரதட்சணம் செய்து முடித்து அம்மாவுக்கு சேலை சார்த்திவிட்டு வந்தோம்.

நாங்கள் சென்னை செல்லும் போதெல்லாம் மேல்மருவத்துார்  சென்று அம்மாவை வழிபடுகிறோம்.

நன்றி (திருமதி டி.எம்.ஆா்.சரோஜினி,சிவகாசி)

(அன்னை அருளிய வேள்வி முறைகள், பக்-311-312)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.