முப்பூவிற்குக் குரு மருந்து

0
334

ஒரு நாள் அம்மா கூறினார்கள் – மகனே மகளே,

அங்கப்பிரதட்சணமும் தியானமும் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?
யாருமறியா முப்பூரகசியம் அதிலுண்டுடா,

மகனே மகளே அங்கப்பிரதட்சணம் செய்யும் மண்ணிலும் முப்பூஉண்டு ,மனித உடம்பிலும் முப்பூ உண்டு,

தியானம் செய்கின்றாயே உன் தலையிலும் முப்பூஉண்டு,
தழையிலும் முப்பூ உண்டு,
தேடு,குருமருந்தை யறிய குருவை நாடு,

அடிகளாருக்கு முப்பூவும் தெரியும் மற்றவர்களின் தப்பும் தெரியும்,
பரகாயப் பிரவேசம் செய்யும் பாலகனிடம் முப்பூ, ரகசியம் உண்டு,

காயகல்ப மருந்தாக கருதப்படுவது முப்பூ, மரணமிலாப் பெருவாழ்வில் மக்கள் வாழ சித்தர்களினால் அருளப்பட்டது முப்பூ,

முப்பூவிற்குக் குரு மருந்து என்ற பெயரும் உண்டு,

அருள் திரு அடிகளார் ஒரே இடத்தில் இரண்டு இடங்களில் இருந்ததை பலர் பார்த்துள்ளனர்,

சித்தர் மீடத்திலும் இருப்பார் ஏழையின் கண்ணீர் துடைக்க , காவலுக்காக அவளது குடிசையின் திண்ணையிலும் இருப்பார்,

முப்பூ இரகசியம் தெரிந்தவர்களினால் இவ்வாறு செய்ய முடியும் என்பது சித்தர்களின் கருத்து,

முப்பூவுக்கு மேலே அப்பூவையெல்லாம் கடந்த நிலை பாலகன் நிலை.
ஒம் சக்தி,