மேல்மருவத்தூர் பாலகன்

0
313

மேல்மரு வத்தூரின் பாலன் – தாயை
வேண்டி யருள்பெற்ற சீலன் – தீமை
மேலோங்கிடத் துயர்செய்பவர் வினையாமையும் விரைந்தோட்டிடும்
வீரன் அதி தீரன்

அன்னைப ராசக்தி தாசன் – அருள்
அள்ளித் தருவதில் நேசன் – அவன்
அருளாகிய பொருள்பெற்றிடின் அழியாத்துயர் அதுவாகவே
ஓடும் நலம் கூடும்

சின்னக்கு ழந்தையைப் போல்வான் – அவன்
சீக்கிரம் அருளும் தருவான் – யர்
செய்திட்ட தவத்தாலே சித்தாட மருவூர்த்
தானோ! விடு வேனோ!

வௌ;ளுடை கொண்டுள்ள போது – அவர்
மேலாய் வணங்கிடும் சாது – அவர்
வெள்ளைம னத்திலெழும் உள்ளக்க ருத்தெல்லாம்
மேவும் புவி தாவும்

செவ்வுடை கொண்டிட்டால் போதும் – அவர்
செப்புவ தைஉல கோதும் – இங்கு
செய்யாததாய்ச் சித்தொன்றிலை தெரிந்தார்பலர் உரைப்பாரதைக்
கேளும் உல கேழும்

ஓமெனும் பீடத்தைச் சுற்றிக் – கோயில்
உள்ளே நுழைத்தலும் வெற்றி – அவர்
ஒருநோக்கினில் அருள்வாக்கினில் உளதாகிய பலநோய்களும்
ஓடும் புகழ் பாடும்.

ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 3 (1982)
பக்கம்: 15