மேல்மருவத்தூர் வேப்பமரத்தடியில் பெற்ற தியான அனுபவம்

0
1434

1986 ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று கருவறை அம்மாவை தரிசித்து விட்டு அதிகாலை நான்கு மணியளவில் கோவிலின் இடப்பக்கமாக உள்ள வேப்பமரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு தியானம் செய்தேன். இனிய பல காட்சிகளைக் கண்டேன். எழுத்தில் வடிக்க இயலவில்லை.
*அம்மாவுக்கு உள்ளே அபிஷேகம் நடந்து கொண்டு இருக்கிறது.* நான் தியானத்தில் இருந்தேன். அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு பீடம்; அதன் எதிரே வாகன பீடம் இருக்கிறது. காட்சியில்……
*தாடியும் முடியுமாய் முனிவரைப் போன்று ஒரு சித்தர்! கூடவே நாயொன்றை அழைத்து வருகிறார். சித்தர் அந்த பீடத்தின் மேல் அமர, நாய் வாகன பீடத்தில் லாவகமீக ஏறி அவரைப் பார்த்து உட்கார்ந்து கொள்கிறது.*
*பிறகு, சித்தருக்கு பால், மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆகாயத்தில் அந்தரத்திலிருந்து பால், மஞ்சள் கலச நீர்கள் ஊற்றப்படுகின்றன. பிறகு தீபாராதனை நடக்கிறது. சித்தர் ஏற்றுக் கொண்டேன் என்ற வண்ணம் ஆசிர்வதிக்கிறார். பிறகு எழுந்து நாயுடன் கிணறு உள்ள வயல் பக்கமாக சென்று விடுகிறார்.*
*இவர் சென்றவுடன் அடுத்து ஒருவர்; சற்று பருமனாக உள்ளார்; நல்ல சிவப்பு நிறம்.தலையோ மொட்டை; உடல் முழுக்க மெரூன் கலரில் ஒரே அங்கி அணிந்திருந்தார். இவருடன் ஒரு பாம்பு வருகிறது. இவரும் வயல் பக்கமிருந்தே வந்தார். வந்தவர் பீடத்தில் அமர, பாம்பு எதிர் பீடத்தில் அமர்ந்து கொள்கிறது. இப்போது பாலபிடேகம். பேரழகுள்ள அந்தப் பாம்பு அவருக்கு பாலபிடேகம் செய்கிறது. பின் அந்தப் பாம்பு அவருக்கு மாலை போட்டு வணங்குகிறது. மாலையை ஏற்றுக் கொண்டு ஆசிர்வதித்து விட்டுப் பாம்புடன் வந்த திசையில் சென்று விடுகிறார். இவைகளை எல்லாம் மௌனமாக நான் கண்டு களித்துக் கொண்டு இருக்கிறேன். பிறகு காட்சி தொடர்கிறது.*
*பீடத்திற்கு நேர்மேலே ஒரு சுயம்பு தோன்றுகிறது. அந்தச் சுயம்பைச் சுற்றிப் பலப்பல தெய்வ சிலைகள் (கல்,ஐம்பொன் சிலைகள்) லிங்கம் உட்பட வலம் வந்து வந்து வந்த திசையே போய்க் கொண்டிருக்கின்றன.*
*உலகில் எல்லாத் திசைகளிலிருந்தும் விக்கிரகங்கள் வந்து வலம் வந்து மீண்டும் திரும்புகின்றன. பார்க்கப் பார்க்க அதிசிய உலகமாகத் தோன்றியது.*
*இந்நிலையில் ஆலயத்திற்கு எதிரே பல கிலோ மீட்டர்கள் தள்ளி, அம்மாவுக்கு வலப்பக்கம் மலைக் குன்றுகள் தென்படுகின்றன! எண்ணற்ற சித்தர்கள் வரிசை வரிசையாக இங்கே வந்தவண்ணம் இருக்கிறார்கள். அந்த மலைக்கும் இந்த ஆலயத்திற்கும் ஒரு பாதையே போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. சித்தர்கள் நடமாட்டம் அவ்வளவு இருந்தது.*
இவ்வளவும் நான் அந்த வேப்பமரத்தின் அருகில் அமர்ந்து பெற்ற தியானக் காட்சிகள்.
பின் கருவறையின் நேரே அமர்ந்து தியானம் செய்தேன். அப்பொழுது சுயம்பின் தோற்றத்தையும், அம்மாவின் சக்தியையும் கொஞ்சம் உணரப்பெற்றேன். *#அம்மா_உணர்த்தினாள்.
*சுயம்புவின் கீழ் பல சக்கரங்கள் சுழன்ற வண்ணம் உள்ளன. சில சக்கரங்கள் சுயம்புவை வலமாகச் சுற்றுகின்றன. சில இடமாக சுற்றுகின்றன. சக்ராயுதம் போல பல சக்கரங்கள் சுற்றுகின்றன. சுயம்பு நிலையாக இருக்கச் சக்கரங்கள்

இயங்குகின்றன. கண்டவற்றில் பாதிதான் எழுத முடிந்தது. அதி அற்புதம்!*
பின் புற்று மண்டபத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்தபோது நான் கண்டவற்றில் சில தெய்வ ரகசியங்கள் உள்ளடங்கி இருப்பதால் அதை எழுதும் தகுதி எனக்கில்லை! எழுத இயலவில்லை உத்தரவு இருப்பின் அதையும் கூறக் கடமைப் பட்டவன்.
தியானத்தில்_பல_தெய்வீகக்_காட்சிகள் கிடைப்பதுண்டு. அந்த அனுபவங்களை யாரும் வெளியிட மாட்டார்கள். அதற்குக் காரணம் உண்டு. அவை திருவருள் இரகசியங்கள்! அவற்றை வெளியிட்டாலும் நம்புவதில்லை! ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை! அதுமட்டுமன்றி ஏளனப்படுத்தப்படும்! *இந்த அனுபவங்கள் தியானத்தில் யாரோ ஒரு சிலர்க்கு மட்டுமே கிடைப்பவை! பெரும்பாலோரால் மனத்தை அடக்கி ஒடுக்கி தியானம் செய்ய முடிவதில்லை! யாரோ ஒரு சிலர்க்கே தியானத்தில் பல அற்புத அனுபவங்கள் கிடைக்கின்றன.* அவற்றை மற்றவர்களால் ஜீரணம் செய்து கொள்ள முடியாது. அதுதான் போகட்டும், அந்த அனுபவங்களைச் சொன்னால் பைத்தியக்காரன் என்பார்கள்.
இங்கே_வருகிறவர்கள்_அமைதியைக் கடைபிடித்தால்_இங்கு_வந்து #செல்வதற்கான_நற்பயன்களைப் #பெறுவார்கள்.
என்பது அன்னை அருள்வாக்கு
தியானம்தான் ஆன்மிகத்தின் திறவுகோல் என்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் புத்தகங்களைப் படிப்பதை விட *நாள்தோறும் அம்மாவை நினைத்து, அடிகளாரை குருவாக வைத்து அரைமணி நேரமாவது தியானம் பழகி வாருங்கள். பல இனிய அனுபவங்கள் உங்களுக்கும் கிடைக்கும். அம்மா அடிகளார் உருவில் அவதார நோக்கம் கொண்டு வந்துள்ள காலப்பகுதி இது….*உங்கள் தியானப் பயிற்சிக்கும், முயற்சிக்கும் குருவருள் கிட்டும்.
ஆசிரியர்.
சக்தி ஒளி
டிசம்பர் 86