வெயிலும் புழுக்கமும்

0
347

” தாயே இந்த ஆலய எல்லைக்குள் வந்ததும் இனம்புரியாத மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கிறது . நீயோ மகா சக்தி உன்னிடம் வந்து சென்றதும் மீண்டும் கவலைகள் தொற்றிக் கொள்கின்றனவே. … அது ஏன்? ! ” என்று கேட்டார் தொண்டர் ஒருவர்.

அதுகேட்டு அன்னை கூறினாள். ” மகனே ! வெளியில் அலைந்து விட்டு மரத்தின் நிழலில் ஒதுங்கினாலும் புழுக்கம் உண்டல்லவா ? ஆற அமர ஓய்வெடுத்த பிறகு தானே புழுக்கம் போகும் ?

இன்பம்-துன்பம், பகல்-இரவு , வெயில்-நிழல், இருள்-ஒளி என்று இப்படித்தானே பிரபஞ்சத்தைப் படைத்து இருக்கிறேன் ? எல்லா ஆன்மாக்களையும் ஈர்க்கிற சக்தியாக நான் இருப்பதால் இந்த எல்லைக்குள் வரும் பொழுது மற்றவற்றையெல்லாம் மறக்க வைக்கிறேன். இந்த ஆலய எல்லையைத் தாண்டும் போது உன் போக்கிலேயே விட்டு விடுகிறேன். மறுபடியும் உன்னை மாயை சூழ்ந்து கொள்கிறது ” என்றாள்.

-தல வரலாறு பாகம் -1