வெறும் கையில் முழம் போட வைக்கிறேன்

0
349

மகனே….!!
வெறும் கையில் முழம் போட வைக்கிறேன்..!!

சென்னையை சேர்ந்த ஒரு அன்பர் அம்மாவிடம்….,

“அம்மா எந்த தொழிலும் செய்ய முடியவில்லை”……!!: குடும்பமே கஷ்டப்டுகிறது”……!!

“எனக்கு ஒரு வழியை காட்டு”……!!
என முறையிட்டார்.

மகனே….!!
” கட்டிட தொழிலுக்குரிய பொருளை வாங்கி விற்பனை செய்”……!!

உன்னை….,
” உன் உறவினர்களே மெச்சும்படி உயர்த்தி காட்டுகிறேன்”……!!
என்றாள் அன்னை.

அம்மா…!
“அதற்கு மூலதனம் வேண்டுமே”…..?

“என் கையில் ஒரு காசு கூட இல்லையே”…..!!
என்ன செய்வேன் என்றார்.

மகனே….!
“வெறும் கையில் முழம் போட முடியுமா”? என…

“உலகம் சொல்லும் அல்லவா”…..?

“நான் உன்னை வெறும் கையில் முழம் போட வைக்கிறேன்”………!!

‘துணிந்து இறங்கு”……!! என்று சொல்லி அனுப்பினாள் அன்னை.

அப்போது..
” சென்னையில் சிமெண்ட் கம்பெனி ஒன்று”…..

” விற்பனை ஏஜெண்ட் தேவை “….என விளம்பரம் செய்திருந்தது.

அதை பார்த்த நண்பர் விண்ணப்பித்து…., “இன்டர்வியூக்கு நேரில் சென்றார்”…..!!

“இவரிடம் முன்பணம் செலுத்த பணம் இல்லை”……!!

மற்றவர்கள் 5, 10, 20 லட்சம் என முன்பணத்துடன் வந்திருந்தனர்.

இவரை விசாரித்த கம்பெனி ….,

” முன்பணம் இல்லாமல் எந்த தைரியத்தில் ஏஜென்ட் எடுக்க வந்தாய்”….
என்றனர்.

“இவர் கடவுளை நம்பி”…..!! “அவர் வழிகாட்டுவார் என்று நம்பி வந்தேன்…..!! என்று சொன்னார்.

“கம்பெனிகாரர் மனதில் என்ன தோன்றியதோ”….?

சரிய்யா…. !
“ஒரு லட்சம் ரூபாய்க்கு சிமெண்ட் மூட்டை அனுப்புகிறோம்”…..!!

” எத்தனை நாளில் விற்று பணத்தை காட்டுவாய்”……? என்று கேட்டார்கள்.

இவர்
“பத்து நாட்கள் என தைரியத்துடன் கூறினார்”…..!!

அவர்களும் சிமெண்ட் அனுப்பினர்.

இவருக்கு தெரிந்த சிமெண்ட் விற்கும் கடைக்கு சென்று…..,.

” எல்லா சிமெண்ட் மூட்டையும் கொடுத்து…..,

“ஒரு லட்சம் மட்டும் வாங்கி கொண்டு”….,

“தவணை நாட்களுக்கு முன்பே பணத்தை அனுப்பி விட்டார்”…….!!

“சிறுக, சிறுக வியாபாரம் சூடுபிடித்தது”….!!

“இன்று அவரது வியாபாரம் கோடிக்கணக்கான ரூபாயில் கொடி கட்டி பறக்கிறது”……!!

“அவரது குடும்பமும் வளமுடன் வாழ்ந்து வருகிறது”……!!

அன்னை காட்டிய வழியில் இன்று வரை…..,

“அவர்கள் தான தருமங்களும் தொடர்ந்து செய்கின்றனர்”…….!!

Ref. “1008-போற்றி விளக்க உரை ”