வேள்விக்குழு தொண்டா்களின் பொறுப்பும் கடமைகளும்

0
486

1). மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடங்கள்- ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற வேள்விகள்- பிற ஆலய கும்பாபிடேக விழாக்கள்- குடும்பநல வேள்விகள்- ஆகிய நிகழ்ச்சிகட்கு வேள்விப் பணிக்குச் செல்பவா்கள் அன்னையிடமோ, ஆன்மிக குரு
அருள்திரு அடிகளார் அவா்களிடமோ உத்தரவு பெற்றே செய்ய வேண்டும். அவ்வாறே நகர நல வேள்விகள், பொது நல வேள்விகள் ஆகியவற்றையும்  உத்தரவு பெற்றே செய்ய வேண்டும்.

2). வேள்விப் பணிகளில் ஈடுபடும் தொண்டா்கள் அகத்துாய்மையும், புறத்துாய்மையும் மிக்கவா்களாகப் பணி செய்ய வேண்டும். யாகசாலையில் நுழைகிறபோது நீராடிவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

3). அன்னையின் முன் வைத்துப் படைக்கப்பட்ட ஓா் எலுமிச்சப்பழத்தை பாதுகாப்பாக மடியில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.

4). வேள்விப் பணியில் ஈடுபடும் தொண்டா்கள் செவ்வாடை அணிந்து கொண்டுதான் பணி செய்ய வேண்டும்.

5). வேள்வித்  தொண்டா்கள் தங்கள் கழுத்தில் அன்னையின் டாலரை அணிந்திருக்க வேண்டும்.

6). யாகசாலையில் வேள்விப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது அரசியல், சினிமா, காமம், கேளிக்கை, அரட்டைப் பேச்சுக்கள் போன்றவை அறவே கூடாது. முடிந்தவரை மௌனமாகவே பணி செய்ய வேண்டும்.

7). “ வேள்வியை வியாபாரமாக்காதே! அவ்வாறு ஆக்கினால் அது விஷமாக மாறிவிடும்” என்பது அன்னையின் எச்சரிக்கை.

8). நம் சித்தா் பீடத்தில் அன்னை அருளிய விதி முறைப்படியே அவற்றைப் பின்பற்றி நியமம் தவறாமல் வேள்வி செய்ய வேண்டும்.

9). வேள்விப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு, அம்மா, அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழைகளைப் பொறுத்து அருள்செய். எந்தப் பிழையும் வராதபடி என் உள்ளிருந்து எனக்கு வழிகாட்டு- என்று அன்னையிடம் மானசீகமாக வேண்டிக்கொண்டு பணி செய்தால் சக்கரங்கள், யாக குண்டங்கள் அமைப்பது ஆகிய பணிகள் தவறில்லாமல் நடக்க ஏதுவாகும்.

10). வேள்விப்பூசை என்பது கத்திமுனை மேல் நடப்பது போன்றது. வேள்விப்பணி, கருவறைப்பணி இந்த
இரண்டு இடங்களிலும் பயபக்தியுடன் நடக்க வேண்டும். சா்வ ஜாக்கிரதை தேவை. ஒரு மின்சார நிலையத்தில் பணிபுரிபவா்கட்கு எவ்வளவு எச்சரிக்கை உணா்வு தேவையோ, அந்த அளவு எச்சரிக்கை உணா்வு தேவை.

11). அவ்வப்போது மாறுகிற கிரக நிலைக்குத் தக்கபடி வழிபாட்டு முறைகளிலும், வேள்விப்பூசை முறைகளிலும் அன்னை மாற்றங்களைக் கூறுவதுண்டு. எனவே வேள்விக்குழு   தொண்டா்கள் வேள்வி சம்பந்தமான எல்லா நியமங்களையும், நெறிமுறைகளையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

12). பல ஆண்டுகள் நெருப்பில் நின்றும், நீரில் நின்றும், இலை, சருகு, காய், கனி தின்றும் தவம் செய்யும் யோகிகட்குக் கிடைக்கிற தவ பலம் இந்த வேள்விப் பணிகளில் ஈடுபடும் தொண்டா்கட்குக் கிடைக்கும். இதனைப் புரிந்துகொண்டு உண்மை உணா்வோடும், கட்டுப்பாடோடும், பொறுப்புணா்வோடும் பணி புரிந்தால் இந்த அவதாரக் காலத்தில் அன்னையின் அருள் பூரணமாகக் கிடைக்கும். அந்த அருள் அவா்தம் சந்ததியினா்க்கும் கிடைக்கும்.

13). பிறா் வீடுகளில் குடும்பநல வேள்வி செய்யச் செல்கிற தொண்டா்கள், அந்த வீட்டாரிடம் எளிமையாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவா்களிடம் போக்குவரவு செலவு மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தொண்டு. அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்க நினைத்தால் அது வியாபாரம். எனவே புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

நன்றி -( அன்னை அருளிய வேள்வி முறைகள் -பக் 414- 415 )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.