வேள்வி பூசையின் மகத்துவம்:

0
307

இந்து மதத்தில் மூன்று
வழிபாட்டு முறைகள் பொதுவாக இருந்தன.
வேத மரபைத் தழுவிய வைதிக
முறை
திராவிடர்களின் மரபைத்
தழுவிய ஆகம முறை
சித்தர்கள், யோகிகள்
மேற்கொண்ட தாந்திரிக முறை

 


 வைதிக முறை:
ஒரு வேள்விக் குண்டம்
அமைத்துத் தெய்வங்களை வேண்டிக் கொண்டு, அவற்றுக்குரிய மந்திரங்களை சொல்லி, அக்கினி
வளர்த்து அத் தெய்வங்களுக்குரிய படையல்களை வேள்விக் குண்டத்தில் ஆவுதியாக அளிப்பது
வைதிக முறை.

ஆகம முறை:
ஒரு தெய்வ விக்கிரகத்தை
நிறுவி, தோத்திரங்கள் சொல்லி, மலரிட்டு அர்ச்சனை செய்வது ஆகம முறை.

தாந்திரிக முறை:
சக்கரங்கள், மண்டலங்கள்,
நியாசங்கல், முத்திரைகள், மந்திரங்களுடன் தெய்வங்களை வழிபடுவது தாந்திரிக
முறை.

ஒரு காலத்தில் இவை தனித்தனியே
பின்பற்றப்பட்டு வந்தன. காலப்போக்கில் இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று
கலந்துவிட்டன.
இன்று திருக்கோயில்
கும்பாபிடேகங்களிலும், கோயில் வழிபாட்டிலும்மேற்கண்ட மூவகை வழிபாட்டு முறைகளும்
கலந்தே உள்ளன.

அன்னை
ஆதிபராசக்தி இந்த
அவதார காலத்தில் பண்டைய வேள்விகளில் இருந்த தகாத அம்சங்களை நீக்கி, இந்த யுக
தர்மத்துக்குத் தக்கபடிபஞ்சபூதங்களை வழிபடும் இயற்கை வழிபாடாக வேள்விப் பூசைகளை
அறிமுகப்படுத்தினாள். அது மட்டுமன்றி வேள்விகளின் மகிமையைத் தன் பக்தர்களுக்கும்
தொண்டர்களுக்கும் புரிய வைத்தாள்.ஒவ்வொரு
விழாவையொட்டியும் வேள்வி:நம் சித்தர் பீடத்திலும்
எந்த ஒரு விழா நடந்தாலும், ஒவ்வொரு விழாவின் போதும் வேள்வி
நடத்தப்படுகிறது.

சித்திரைப் பெளர்ணமி
விழாவின் போது மிகப்பெரிய அளவில் கலச விளக்கு பூசை நடத்துமாறு பணியிடுவாள். அந்த
வேள்வியில் இடம் பெறுகிற கலச விளக்குகளை வாங்கிச் சென்று வீட்டின் பூசையறையில்
வைத்து வழிபட்டு வருமாறு கூறுவாள்.

ஒவ்வொரு ஆண்டும் கலசம்,
விளக்கு வாங்கிச் சென்று மன்றங்களிலும், வீடுகளிலும் வைத்துப் பூசை செய்யுமாறு
சொல்வாள் அன்னை ஒரு முறை
குறிப்பிட்டாள்: ஒவ்வொரு ஆண்டும்
கிரகங்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் அவரவர்
இன்பதுன்பங்களுக்கும் தொடர்பு உண்டு.

அவரவர் ஊழ்வினைக்கும் தொடர்பு உண்டு. அவரவர்
கைரேகைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இவ்வுண்மைகளை அறியலாம்.
எனவே அவ்வப்போது,
மாறிவரும் கிரக நிலைகளுக்கு ஏற்ப இங்கு வேள்வி செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு
வேள்வியிலும் கலந்து கொண்டு
கலச விளக்கு வாங்கிச் சென்று பூசை செய்! உள்ளுணர்வோடு
செய்யும் பூசைக்கேற்ப உன் பாவச் சுமை குறையும்!” என்று அன்னை சொல்லிக்
காட்டினாள்.

வேள்வியின் பயன்கள்.

மழைக் கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்” என்கிறார்.
1. புகை, ஜோதி, நீர்த்துளி,
காற்று இவற்றின் சேர்க்கையே மேகம். இந்த நான்கின்
சேர்க்கை இருந்தால் மட்டுமே மழை பொழியும். இந்த நான்கையும் ஒரு சேரக்
கூட்டுவிக்கும் சக்தி வேள்விக்கு உண்டு என்கிறார் கவி காளிதாசர்.

சமண மதத்தவரும், சமணத் துறவிகளும் ஒரு காலத்தில் வேள்விப் பூசைகளை
நிந்தனை செய்து வந்தனர். ஆயினும், சிலப்பதிகாரம் பாடிய சமணத் துறவி இளங்கோ அடிகள்
வேள்விச் சாலை பற்றிக் குறிப்பிடும் போது

சாதாரண மேகங்களைச் சூல் கொண்ட மழை மேகங்களாக மாற்றும் சக்தி படைத்த யாகசாலை
என்று இதற்குப் பொருள்.
இதிலிருந்து தெரிவது என்ன? வேள்விப் பூசையால் மழையைக் கொண்டு வரலாம் என்று
தெரிகிறது அல்லவா?

1. வேள்விகள் மூலமாகத் தனி மனிதனுக்கும் நன்மை கிடைக்கிறது. சமுதாயத்திற்கும்
நன்மை கிடைக்கிறது. உலகத்திற்கும் நன்மை கிடைக்கிறது.

2. அண்டங்களில் ஏதோ ஒரு சில பகுதிகள் திருத்தம் அடைகின்றன.

3. “இந்த யாகத்தின் மூலமாக இந்தப் பூலோகத்தையும் வான மண்டலத்தையும் சுத்தப்
படுத்துவேனாக!” என்று ரிக்ஷி ஒருவர் ரிக் வேதப் பாடல் ஒன்றில் கூறுகிறார். ஆதலின்
வேள்விப் பூசைகளால் வான மண்டலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
4. சுற்றுச் சுழல் பாதுகாப்புக்கு வேள்விப் பூசையும், வேள்விப் புகையும்
உதவுகின்றன.
5. உடல் நோய்கள் நீங்க வேள்விப் புகையும்,  வேள்விச் சாம்பலும்
உதவுகின்றன.
6. வேள்விகள் மூலமாக மறைந்துலவும் தெய்வ சக்திகள் திருப்தி அடைகின்றன.
பசியாறுகின்றன. ஊட்டம் பெறுகின்றன. ஊக்கம் பெற்று நன்மை புரிகின்றன.
7. மறைந்துலவும் அசுர சக்திகள், தீய சக்திகளின் ஆதிக்கம்
கட்டுப்படுத்தப்படுகிறது.
8. வேள்விப் பூசைகள் மூலம் தெய்வ சக்திகளுக்கும், மனித குலத்திற்கும் பரஸ்பர
உதவிகள் பரிமாற்றப்படுகின்றன.
9. கோள்களின்
சுழற்சியால் ஏற்படும் தீய விளைவுகளின் பாதிப்பைத் தடுக்க
யாகங்கள் உதவுகின்றன.

10.” வீட்டைச் சுற்றிக் கலச தீர்த்தம் தெளிப்பதன் மூலம் அவரவர்
குடும்ப ஊழ்வினை நீங்கும் “என்பது அன்னையின் அருள்வாக்கு.

11. வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட விளக்குகளை வீட்டில் ஏற்றி வழிபடுவதால்
லட்சுமிகரம் வந்து வாய்க்கிறது.
12. ஏவல், பில்லி, சூனியத் தொல்லைகள் நீங்க வேள்விப் பூசைகள்
உதவுகின்றன.

13. தனி மனிதனின் உடல், மனம், ஆன்மா- இவற்றுக்கு அளவற்ற நன்மைகள்
கிடைக்கின்றன.

14. நம் சித்தர்பீடத்தில் முறைப்படி உலக நலம் கருதிய வேள்விகள்- நகர நல
வேள்விகள்- – குடும்பநல வேள்விகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர

1. புதுமனை புகுவிழா

2. திருமண வேள்வி

3. வளைகாப்பு

4. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல்

5. காதணி விழா

6. மங்கல நீராட்டு விழா

7. கால்கோள் விழா

8. மணி விழா

9. சவ அடக்கம்
10. 16- ஆம் நாள் காரியம்

11. நீத்தார் நினைவு நாள்

 
ஆகிய சடங்குகள் அன்னை அருளிய விதிமுறைப்படி வேள்விக்குழுவினரால் ஆங்காங்கு
நடத்தி வைக்கப்படுகின்றன.

 
ஓம் சக்தி!

ஆதாரம்- சக்தி ஒளி யூலை- 2011