ஆடிப் பூரத்தன்னை உருள் வலம்

0
690

அருள்வலத் தளிக்கும் அன்னை ஆடியில் பூரம் தன்னில்
உருள்வலம் செய்யும் காட்சி ஒருமையாம் உணர்வின் கண்டோர்
தெருளவலம் யிருந்து செல்லும் திசையெலாம் விளக்கம் ஆகப்
பொருள்வலத் துயர்ந்துற் றீகை புரிந்துமேல் பொலிவு கொள்வார்.

அலகில் அண்டம் பலபூத்துக் காத்துற நழித்தான் உருளுகையில்
இலகும் துணையின் ஈசனுடன் இருவர் உருண்டார் பரிசுடரோடு
உலகம் உருண்ட துருண்டவழி உயிர்கள் உருள ஒளிகான்று
விலகும் மீன்கள் உருண்டனவிண் வெளியும் உருண்ட துருண்டதடி!

உருண்டாள் உருட்டி ஓங்குபவன் உலக வாழ்வில் உலைந்துமிக
வேருண்டார் மேலை வினைவாட்ட விலக்கும் வழிமேல் காணாது
மருண்டார் எல்லாம் மருவத்தூர் வந்து தெளிந்து மயக்கமறத்
தெருண்டார் அன்னை திருமேனி திரண்டு புரண்ட திறம்கண்டார்.

திறம்கண் டிருந்தார் சிவசக்தி சிறப்பை யுணர்ந்து மறை ஓதும்
அறம்கண் டிருந்தார் அருளவரும் அணிகண் டிருந்தார் அகம் போலப்
புறம்கண் டிருந்தார் பூவுலகம் பொலிவுற் றிருக்கப் புரண்டுவரும்
நிறம்கண் டிருந்தார் நெஞ்சுரு நிலைகொண் டிருந்தார் நின்றவரே!

மண்ணில் உருண்டாள் அன்றன்பர் மனத்தில்உருண்டாள் மலரிட்டக்
கண்ணில் உருண்டாள் காண்பவரின் கதிக்காய் உருண்டாள் கதிரென அவ்
விண்ணில் உருண்டாள் விளங்குமொளி வெளியில் உருண்டாள் வேண்டுபவர்
எண்ணில் உருண்டாள் இறைஞ்சுபவர் இசையில் உருண்டாள் எந்தாயே!

நிலைகொண் டெழுந்த நெடுஞ்சுடரே நிலம்கொண்ட டெழுந்துற் றுருளுவதால்
மலைகொண் டெழுந்த முழுமுதலும் மறைகொண்டெழுந்த மால்மகனும்
அலைகொண் டெழுந்த அரியவனும் அணிகொண் டெழுந்தங் களவிலதாம்
கலைகொண் டெழுந்த அறிஞர்எலாம் கதிகொண் டெழுதற் குருண்டனரால்

முடிபுரண்டது முழுமதி முகத்தொடு முரணா
அடிபுரண்டன அருள்வளம் அன்னைபோல் அளிக்கும்
படிபுரண்டது பாரைவயின் பாங்கொரு பவளக்
கொடிபுரண்டது போலவண் புரண்டனன் கொழுந்தே!

கொழுந் தெழுந்தொரு கொடியென மலர்கொளக் குலுங்கி
விழுந் தெழுக் தெழில் மெய்யுற விசைத்துமண் மெலிய
எழுந் தெழுந் தணி இணைக்கரம் போலடி இணைத்துச்
செழுந் தழைக் கவின் சக்தியும் சிவனுமாய்ச் சீறி

சீறிபைங்கரு நாகமாய்ச் சித்தராய்த் திரண்டு
மாறிக்கீழ்மலை மேலென வலமுற மயங்காது
ஆறி அங்கமும் நெஞ்சமும் அழகுற அமைந்துத்
தேறி நின்றவர் தமக்குமோர் திறம்கொடுத் துகுண்டான்.

மண்ணதிர்ந்தம் மருவத்தூர் மாமணி உருள
விண்ணதிர்ந்தது வியந்தொளி கண்டவர் மெலியக்
கண்ணதிர்ந்தன கருத்துறப் பாடிய கலையின்
பண்ணதிர்ந்திட பறந்தனன் பட்டொளி பரப்பி

தேவிதேவியென் றாண்டுறத் திரண்டவர் தெளிவின்
ஆவிமேல் வரும் அன்பொடுற் றழைத்தவை அறிந்தே
தாவிமேல்வரும் சுயம்பினைத் தானுறத் தழுவி
நாவின் நல்லதோர் நாகமாய்ச் சீறிய கயத்தின்

உருளுகின்றவன் உற்றவர்க் கொப்பிலா உரத்தை
அருளுகின்றவன் ஆகினான் அணிபெற அமைந்து
தெருளுகின்றவர் தேவியே சிவனெனத் தெளிந்தார்
மருளுகின்றவர் மயக்கமும் அகற்றினான் மயிலே!

மின்னொன் றசைந்துகரு முகில்மேல் விரிந்துவர
மொலிவோ டிழிந்துபுவியில்
பொன்னொன்ற வைத்தமணி வடிவாய்ப் புனைந்தபுது
பூவிற் பொலிந்ததுகிலின்
முன்னொன்று வைத்தமுழு மதியாய் முளைத்தமுக
முதலின் முடித்த முடியில்
பின்னொன்ற வைத்தமலர் பிழிவந்து சொட்டஎமை
பெற்றாள் உருண்டு வரவே!

பதியாய் விளங்குமரு வத்தூர் படர்ந்த கொடி
பணிவார் விரும்ப வளர்பொன்
நிதியாய் விளங்கியொளி நிலையாய் வடிந்தஉரு
நெறியாய்ப் பரந்த புவியில்
கதியாய் விளங்கிவளர் கலையாய் விளைந்த பொருள்
கனிவாய் வழங்குமருளில்
விதியாய் விளங்குவன வெளிபோய் விலங்கிவிட
விரைவாய் உருண்டு வரவே!

நலிவுற் றயர்ந்தஉடல் நலமற் றுலைந்துதனர்
நடையுற் றணைந்த வறியோர்
வலிவுற் றுயர்ந்துபல வளமுற் றலைந்துபெரு
மதிபெற் றுயர்ந்து வரவே!
பொலிவுற் றுயர்ந்துசிவ புரியுற் றெழுந்தபடி
புகழுற் றிருந்த மருவூர்
கொலுவுற் றிருந்தவன்தன் குடிலுற் றுருண்டுவரும்
கொடையுற் றிசைக்க வலமோ!

பாம்பின் வடிந்தஉரு பாங்கில் எழுந்ததிரு
பதிவாய் படர்ந்த கொடியோர்
வேம்பின் வடிந்தசுவை பாலின் விதித்தவினை
வேரின் விலக்கிக் கழையார்
காம்பின் வடிந்தகவின் தோளின் கனிந்தவருள்
சுதிகொண் டுருண்டு வருவான்
தாம்பின் வடிந்து வரும் தாளைத் தலைக்குமுடி
தாமுற் றெடுப்பர் அடியார்.

இமையா திருந்தவிழி இசையாய் நிறைந்தவளை
இதழால் இசைத்த படியே
அமையா திருந்துநிலை அணியாய் எழுந்துவரும்
அருளால் புரிந்த வகையில்
சமையா திருந்தபொருள் தருவாள் எனத்தகையின்
தவழ்வாள் தமிழ்க்கு முறவாம்
உமையாள் உருண்டுவர ஓம்என்றிசைத்த பெரும்
உரவோர் துளிர்க்க விழிநீர்.

ஆடற்கியைந்துவரு நாதற்குயர்ந்த விழி
ஆளக் கொடித்து வடிவேல்
கூட ற்கியைந்தஉரு வாதற்கெடுத்தசிவ
கோலத் திருந்த முறையே
பாடற் கியைந்ததமிழ் மீதுற்றிசைத்த மறை
பாகின் சுவைத்த பயனாய்
நாடற்கியைந்தபலர் நாவுற்றுகுண்டபடி
நலமாய் உருண்டுவரவே!

அலையாதிருந்தபுலன் ஐந்தும் அமைந்தபடி
அமுதாயம் விளைந்த அருளால்
நிலையாய்திருந்திநிறை நினைவாய் புனைந்தமொழி
நெறியாய் இசைத்த வகையால்
கலையாதிருந்தமனம் கதியாய் உதித்தவளும்
கனிவாய் உருண்டு வரவே
மலையாதிருந்தவழி மறையோன் இருந்ததிரு
மருவூர் சிறந்ததடியே!

செம்பொற் சிறுசெடி பம்பித் தழைமலர்
தெளிவே! ஒளியே! பூந்
தென்றற் றருமணம் ஒன்றிப் படவுயர்
திருவே! மருவூராய்!
பைம்பொற் சுடரொளி தன்பிற்படவரும்
படிவே! வடிவே! மெய்
பற்றித்திருமுறை முற்றத் தருநெறி
பனியே! கனியே! வான்

கொம்பிற் பெருசிவம் கும்பிட் டுயர்வருள்
குணமே! வணமே! எம்
குற்றம் கெடஅருள் பெற்றுத்தருவது
குறியாய்! அறிவோமே!
நம்பிச் செயல்வழி தெம்பிற் பணிசெய
நயனும் பயனாக
நாடித் தெரிவது தேடித்தருவது
நலம்நீ வலமாய்வா!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 10 (1982)
பக்கம்: 17-20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.